செய்திகள் :

I’m Game: `காந்தா படத்தில் நடித்தபோது எனக்கு அந்த பயம் இருந்தது' - துல்கர் சல்மான் ஓப்பன் டாக்

post image

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் துல்கர் சல்மான், ``நான் எந்தப் படத்தை விளம்பரப்படுத்த வந்தாலும், தமிழ்நாட்டில் நேரடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து எங்களுடைய உழைப்பைக் காண்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். நல்ல படங்களை இங்குள்ள மக்கள் எப்போதும் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு. அந்த வகையில் இந்தப் படம் ஒரு நேரடித் தமிழ்ப் படம் போலவே இருக்கும்.

பல முன்னணித் தமிழ் நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். எனக்கு ஒரு கதை அல்லது கதாபாத்திரம் கேட்கும்போது 'இதை நாம எப்படிப் பண்ணப் போறோம்?' என்ற பயம் வந்தாலே, அந்தப் படத்தை உடனே ஒப்புக்கொண்டு செய்யத் தொடங்கிவிடுவேன்.

காந்தா படத்தில் நடித்தபோதும் எனக்கு அந்த பயம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தில் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளேன். ஷூட்டிங் சமயத்தில் சில நேரங்களில் இந்த கதாபாத்திரத்திற்குத் தேவையான மென்டல் கெபாசிட்டி நமக்கு இருக்கிறதா என்று யோசிக்கும் அளவிற்கு சவாலாக இருந்தது.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் எப்படி ஒரு எதிர்பாராத ஜானர் மாற்றம் (Genre shift) இருந்ததோ, அதேபோல் இந்தப் படத்திலும் திரையரங்கில் பார்வையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அதனால்தான் படத்தின் முக்கியக் திருப்பங்களை நாங்கள் ட்ரைலரில் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. செப்டம்பர் 3 அன்று திரையரங்கில் இதைப் பார்த்து மக்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்." என்றார்.

What To Watch: 'சர்தார் 2', 'மண்டாடி', 'விஸ்வநாத் & சன்ஸ்' - இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்

மண்டாடி: 'மண்டாடி' திரைப்படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம்... மேலும் பார்க்க

"நான் என் அடையாளத்தை இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்" - சமந்தா

நடிகை சமந்தா சமீபத்தில் 'The Hollywood Reporter' ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். மயோடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து அந்த நேர்காணலில் பேசியிருக்கும் சமந்தா, "மயோடிஸ் நோயால் நான் பாதிக... மேலும் பார்க்க

ஆரண்ய காண்டம் : வன்முறை அழகியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 23

`சினி'ஸ்கோப் 23ஆரண்யகாண்டம்பசுபதியை கஜேந்திரனின் ஆட்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுபதி பயத்துடன் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறான். அதுவொரு பரபரப்பான சேஸிங் காட்சி. ஏதேதோ குழப்பமான பின்னணி இசை ... மேலும் பார்க்க

Mandaadi: "ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்!" - நடிகர் சூரி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Mandadi இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மு... மேலும் பார்க்க

Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே?

RAW ஏஜென்ட்டான விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) கடந்தகாலத்துடன் தொடர்புடைய முக்கியமான மிஷனுக்குள் இழுக்கப்படுகிறார். சில நொடிகளில் லட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கக்... மேலும் பார்க்க

Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி!

ஊரில் தன்னை பாய்மரப் படகு போட்டியில் சேர்க்க மறுக்கும் சட்டாப்புலியின் (சுஹாஸ்) மகனைக் கொல்ல முயற்சி செய்கிறார் மாரி (மிதுன் ஜெய் சங்கர்). ஆனால், இதில் மாரியின் குறி தவறிவிட, சட்டாப்புலியும் அவரின் ஆட... மேலும் பார்க்க