செய்திகள் :

IND v SA: "அதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு" - தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

post image

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இமாலய வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

indian team
indian team

இரண்டாவது டெஸ்ட் போட்டி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது.

முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 489 ரன்களும், இந்திய அணி 201 ரன்களும் எடுத்தன.

288 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதன்மூலம், இந்தியாவுக்கு 549 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது தென்னாப்பிரிக்க அணி.

இலக்கைத் துரத்திய இந்திய அணி, 5-ம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 140 ரன்களுக்குச் சுருண்டது.

south africa team
south africa team

இதன் மூலம் 408 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது தென்னாப்பிரிக்க அணி.

இதன்மூலம், 25 ஆண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணில் தொடரை வென்றுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய ரிஷப் பண்ட் (இந்தப் போட்டிக்கு மட்டும் கேப்டன்), "இந்தத் தோல்வி ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. ஒரு அணியாக நாங்கள் இன்னும் மேம்பட வேண்டும்.

இந்தத் தொடரில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு, ஒரு அணியாக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். தொடர் முழுவதும் தென்னாப்பிரிக்க அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது.

Rishab Pant
Rishab Pant

போட்டியில் சில சமயங்களில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்தோம். ஆனால் அந்த நல்ல தருணங்களை எங்களால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

அதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு. சொந்த மண்ணில் ஆடுகிறோம் என்றாலும், கிரிக்கெட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எதிர்காலத்தில் தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு செயல்படுவோம்" என்று பேசியிருக்கிறார்.

"டாஸ் போடுறது மட்டுமே கேப்டன் வேலை இல்ல" - சூர்யகுமார் யாதவ் மீது முன்னாள் வீரர் கடும் விமர்சனம்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் முதல் இந்தியாவில் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் ஆடி வருகிறது.முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 - 0 என இந்தியாவை தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ் செய்ய, அடுத... மேலும் பார்க்க

``என் கணவர் எந்தப் பழக்கத்துக்கும் அடிமையாகவில்லை; ஆனால் அணியினர்.!" - ஜடேஜா மனைவி ரிவாபா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. முதல்முறையாக 2009-ல் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜடேஜா, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 ... மேலும் பார்க்க

``என் வாழ்வில் அதை விட வேறெதையும் நான் அதிகம் காதலிக்கவில்லை!" - மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், துணைக் கேப்டனுமான (ODI) ஸ்மிருதி மந்தனாவுக்கு, பலாஷ் முச்சல் என்பவருடன் கடந்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது.ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள... மேலும் பார்க்க

google Search 2025: உலகளவில் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்; முதல் 10 இடம் யாருக்கு?

இந்த 2025 ஆண்டு இந்தியாவிற்குப் புதிய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த தீவிர அரசியல் முரண்பாடுகளுக்கு இடையேயும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாக்... மேலும் பார்க்க

IND vs SA: ஹர்திக்கின் அதிரடி; 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா அணி டாஸை வென்று, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 1... மேலும் பார்க்க

"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" - கம்பீருக்கு அஷ்வின் ஐடியா!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற... மேலும் பார்க்க