IND v SA: `25 ஆண்டுகளுக்குப் பின்.!' - இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப...
IND v SA: `25 ஆண்டுகளுக்குப் பின்.!' - இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இமாலய வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல்போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி அஸ்ஸாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 489, இந்திய அணி 201 ரன் எடுத்தன.
288 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதன்மூலம், இந்தியாவுக்கு 549 ரன் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது தென்னாப்ரிக்க அணி.
இலக்கை துரத்திய இந்திய அணி, 5-ம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 140 ரன்களுக்குச் சுருண்டது.

இதன் மூலம் 408 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது தென்னாப்பிரிக்க அணி.
இதன்மூலம், 25 ஆண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணில் தொடரை வென்றுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.


















