செய்திகள் :

IND vs NZ: "என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை கொடுத்தார்கள்.!"- நெகிழும் சூர்யகுமார் யாதவ்

post image

அகமதாபத்தில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டிருக்கிறது.

ind vs nz
ind vs nz

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், " இந்த தருணத்தை முழுமையாக உணர இன்னும் நேரமாகும். 2 ஆண்டுகளுக்கு முன்பு பிசிசிஐ நிர்வாகிகளும் ரோஹித்தும் என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை கொடுத்தார்கள்.

2 ஆண்டுகளாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தையே ஆடி வந்தோம். சஞ்சு சாம்சன், வருண், அபிஷேக் போன்றோர் மேட்ச் வின்னர்கள். அவர்களிடம் ஸ்பெசலான ஒரு விஷயம் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். பும்ரா இந்த தேசத்தின் சொத்து. ஒரு தலைமுறைக்கான வீரர் அவர். நன்றி அகமதாபாத்!" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

T20 WC: "என்னைபோல இந்த தருணத்திற்காக நீயும் ஆசைப்பட்டாய்.!"- மனைவிக்கு நன்றி தெரிவித்த சஞ்சு சாம்சன்

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்திருக்கிறது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் அதிரடி காட்டிய ... மேலும் பார்க்க

T20 WC: இந்திய தேசத்தின் சொத்து; எதிரணியினருக்கு சிம்ம சொப்பனம் - பும்ரா ஒரு தலைமுறைக்கான பௌலரே!

2024 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் விராட் கோலி பும்ராவை ‘இந்திய நாட்டின் சொத்து’ என்று பாராட்டி இருந்தார். இரண்டு வருடங்கள் கழித்து அதே வார்த்தைகளில் மீண்டும் பும்ராவை ஏகத்துக்கும் புகழ்ந்... மேலும் பார்க்க

IND Vs NZ: `கார் விபத்தில் என் சகோதரியை இழந்துவிட்டேன்; இந்த வெற்றியை...' - இஷான் கிஷன் எமோஷனல்

அகமதாபத்தில் நேற்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையைச் சூடி இருக்கிறது. இந்த வெற்றியின் ம... மேலும் பார்க்க

IND vs NZ: "எனது அடுத்த இலக்கு தங்கப்பதகத்தை வெல்வதுதான்.!"- கேப்டன் சூர்யகுமார் யாதவ்

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது. உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் சூர... மேலும் பார்க்க