செய்திகள் :

IPL: முதல்முறையாக சாம்பியனாக களம் காணும் RCB; பேட்டிங் ஓகே, பந்துவீச்சு? - அதிர்ச்சி கொடுக்குமா SRH?

post image

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 19-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 28) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில், கடந்த ஆண்டின் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்கிறது.

18 சீசன்களாகக் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த 'ஈ சாலா கப் நம்தே' கோஷம், கடந்த 2025-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் நிஜமானது. வரலாற்றில் முதன்முறையாக, நடப்பு சாம்பியன் என்ற கம்பீரத்துடன் ஆர்சிபி அணி இன்று தனது சொந்த மண்ணில் களமிறங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், இந்த முறையும் சாம்பியன் ஆட்டத்தைத் தொடர வேண்டிய அழுத்தம் அந்த அணிக்கு உள்ளது.

ரஜத் படிதார் - RCB

மறுமுனையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புதிய உத்வேகத்துடன் களமிறங்குகிறது. அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. இதனால், அதிரடி வீரர் இஷான் கிஷன் அணியை வழிநடத்த உள்ளார். முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனை வீழ்த்தி, தொடரை வெற்றியுடன் தொடங்க ஹைதராபாத் அணி கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.

கொண்டாட்டமில்லா தொடக்கம்!

வழக்கமாக ஐபிஎல் தொடக்க விழா, கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி, ஆர்சிபி அணி கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின்போது சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். அந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், மைதானத்தில் 11 இருக்கைகள் அவர்கள் நினைவாகக் காலியாக வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் பந்துவீச்சில் பின்னடைவு!

பேட்டிங்கில் இரு அணிகளும் பலமாக இருந்தாலும், பந்துவீச்சு கவலையாக உள்ளது. கடந்த ஆண்டு ஆர்சிபி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார். அதேபோல, யாஷ் தயாள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். இதனால், புவனேஷ்வர் குமார், மங்கேஷ் யாதவ் போன்ற வீரர்களை ஆர்சிபி நம்பியுள்ளது.

பேட் கம்மின்ஸ்

ஹைதராபாத் அணியிலும் இதே நிலைதான். கேப்டன் பேட் கம்மின்ஸ் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு. பிரைடன் கார்ஸ், ஜெயதேவ் உனத்கட், ஹர்ஷல் படேல் ஆகியோர் அடங்கிய பந்துவீச்சு, ஆர்சிபி-யின் பலம்வாய்ந்த பேட்டிங் வரிசையை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது பெரிய சவாலாக இருக்கும்.

ரன் மழைக்கு வாய்ப்பு?

பந்துவீச்சு பலவீனமாக இருந்தாலும், பேட்டிங்கில் பட்டையைக் கிளப்ப இரு அணிகளிலும் வீரர்களுக்கு பஞ்சம் இல்லை. ஆர்சிபி அணியில் விராட் கோலி, ரஜத் படிதார், டிம் டேவிட், பில் சால்ட் ஆகியோர் மிரட்டக் காத்திருக்கின்றனர். ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், கிளாசன், லியாம் லிவிங்ஸ்டன் என அதிரடி வீரர் பட்டாளமே உள்ளது. இதனால், சின்னசாமி மைதானத்தில் இன்று ரன் மழை பொழியும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இரவு 7:30 மணிக்குத் தொடங்கும் இந்த ஆட்டத்தில், சாம்பியன் ஆர்.சி.பி தனது ஆதிக்கத்தைத் தொடருமா அல்லது ஹைதராபாத் அதிர்ச்சி கொடுக்குமா என்பது தெரிந்துவிடும்.!

போட்டி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இடம்: எம். சின்னசாமி மைதானம், பெங்களூரு

நேரம்: இரவு 7:30 மணி

SRH vs DC: "கேமராவை என் அப்பா பக்கம் திருப்பி அவர் ரியாக்ஷனைப் பாருங்க" - ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல் 21) ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.அபிஷேக் சர்மாவின் அதிரடி சதமே சன்ரைசர்ஸ் அணியின் ... மேலும் பார்க்க

SRH Vs DC: "பீல்டிங் மட்டும் கைகொடுத்திருந்தால் மேட்ச் மாறியிருக்கும்"– தோல்வி குறித்து அக்சர் படேல்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 21) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் போராடித் தோல்வியடைந்தது. அபிஷேக் சர்மா மற்றும் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் இ... மேலும் பார்க்க

IPL: கேன்வாஸ் ஷுவில் பயிற்சி; சைக்கிளில் பயணம்; மும்பை அணியில் அசத்தும் அஸ்வனி குமார் - யார் இவர்?

'எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன்' என உத்வேகமாக பேசிய மும்பை அணியின் இளம் வீரரான அஸ்வனி குமார் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்... மேலும் பார்க்க

GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" - மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி... மேலும் பார்க்க

GT vs MI: "மைதானத்தில் நான் கொடுத்த எனர்ஜி எனக்கே தலைசுற்றலை ஏற்படுத்தியது, ஆனால்.!"- ஹர்திக்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்20)நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு மு... மேலும் பார்க்க

GT vs MI: 'OG is Back டி' - கம்பேக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; வீழ்ந்த குஜராத் டைட்டன்ஸ்!

"மூழ்காத ஷிப்பே மும்பை ஷிப்பா" எனப் பாட வைக்குமளவு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது மும்பை அணி.ரபடாவின் பீரங்கித் தாக்குதலில் தொடங்கி, திலக் வர்மாவினை கதாநாயகனாக்கிய குஜராத்தின் திக்திக்... மேலும் பார்க்க