நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏசி-யை இயக்குகிறீர்களா? - இது உங்களுக்கான பாதுகாப்பு வ...
IPL 2026: "CSK-வை விட மும்பை அணி தான் சிறந்தது, ஏனென்றால்..!"- முன்னாள் வீரர் இர்பான் பதான்
இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக் கொடுத்து ஏலம் எடுக்கப்படும் வீரர்கள் குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில், சிறந்த அணி எது? என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
JioStar நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இர்பான் பதான், "ஐபிஎல் தொடர் என்பது ஒருநாள் உங்களை ஹீரோவாக்கும், மறுநாளே உங்களை காணாமல் போகச் செய்துவிடும்.
ஏலத்தில் பல கோடிகள் கொடுத்து வாங்கப்படும் வீரர்கள், அடுத்த சீசனில் மோசமாக விளையாடி, பின்னர் எந்த அணியாலும் கண்டுகொள்ளப்படாமல் போவதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம்.

ஒரு வீரர் மீது இவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சில போட்டிகளில் சொதப்பினால் என்ன நடக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
அந்தச் சரிவிலிருந்து அவர் தன்னை எப்படி மீண்டும் தயார்படுத்திக் கொண்டு, நம்பிக்கையுடன் களத்திற்கு வருகிறார் என்பதே அவரது உண்மையான திறமையைக் காட்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில், சிறந்த அணி எது? என்பது குறித்து பேசிய அவர், "ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் மும்பை ஆகிய அணிகளில் தலைசிறந்த அணியைத் தேர்ந்தெடுப்பது எப்போதுமே விவாதத்திற்குரியதாகவே இருக்கும்.
ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் தான் சிறந்த அணி. சிஎஸ்கேதான் எப்போதும் சிறந்த அணி என்று சொல்வார்கள். அவர்களும் 5 கோப்பைகள் வென்றிருக்கிறார்கள். அதில் சந்தேகமில்லை.

ஆனால், இரு அணிகளில் சற்றே கூடுதல் சிறப்பு கொண்டது மும்பை அணி ஏனெனில் மும்பை அணி சிறந்த வீரர்கள் பலரையும் உருவாக்கியதோடு, திறமைவாய்ந்த இளம் வீரர்களையும் இந்திய அணிக்கு கொடுத்திருக்கிறது.
முதலில் அணியை பெரிய வலிமையான அணியாக கட்டமைக்க வேண்டும். பின்னர், அதில் இருந்து வெற்றிகளை குவிக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.




















