செய்திகள் :

Iran : அலி கமேனி இறுதிச்சடங்கு: 4 மாதங்களாக உடல் எங்கே இருந்தது? இஸ்லாமிய விதியை மீறி தாமதமானதா?

post image

உலக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவரது இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் தற்போதுதான் தொடங்கியிருக்கின்றன. அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஈரானில் போர் உச்சகட்டத்தை எட்டியதால் அவரது இறுதிச்சடங்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

தற்போது அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து, கமேனியின் உடலுக்கு பிரமாண்ட அஞ்சலி செலுத்த ஈரான் மக்கள் தயாராகி வருகின்றனர். தலைநகர் டெஹ்ரான் மட்டுமன்றி, ஈரான் மற்றும் ஈராக்கின் முக்கிய 5 நகரங்களுக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவிருக்கிறதாம். ஜூலை 9-ல் அவரது சொந்த ஊரான மஷாத் (Mashhad) நகரில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி

4 மாதங்களாக உடல் எங்கே... எப்படிப் பாதுகாக்கப்பட்டது?

இஸ்லாமிய முறைப்படி ஒருவர் இறந்த சில நாள்களிலேயே உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் மரபு. ஆனால், கமேனி பிப்ரவரி மாதமே கொல்லப்பட்டும், 4 மாதங்களாக இறுதிச்சடங்கு நடக்காதது ஏன் என்ற மில்லியன் டாலர் கேள்வி உலக அரங்கில் எழுந்தது.

பொதுவாக இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின்படி உடலை ரசாயனங்கள் தடவி பதப்படுத்துவது (Chemical Embalming) தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க கமேனியின் உடல் எப்படிப் பாதுகாக்கப்பட்டது என்பது பெரும் பேசுபொருளாக இருக்கிறது.

இது குறித்து சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் டாக்டர் முகமது உமர் விளக்குகையில், "போர்க்காலச் சூழல் போன்ற விதிவிலக்கான அசாதாரண சூழ்நிலைகளில், உடலை அடக்கம் செய்யத் தாமதப்படுத்துவதற்கும், குளிரூட்டப்பட்ட முறையில் உடலைப் பாதுகாப்பதற்கும் ஷியா (Shia) பிரிவு சட்டங்களில் சில விலக்குகள் உள்ளன. இதன்படி, கமேனியின் உடலுக்கு எந்த ரசாயனமும் பயன்படுத்தாமல், அதிநவீன மிகக் குளிர்ந்த குளிர்பதனக் கிடங்கில் (Refrigerated Cold Storage) வைத்து உறைநிலையில் 4 மாதங்களாகப் பாதுகாத்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறார்.

ஈரான்

அரசியல் பின்னணி!

ஈரானில் மிக நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்த ஒரு உச்ச தலைவரின் இறுதிச்சடங்கை, சாதாரணப் போர்க்களச் சூழலில் அவசர அவசரமாக நடத்த ஈரான் அரசு விரும்பவில்லை. அமெரிக்காவுடன் ஒரு சுமுகமான தற்காலிகப் போர்நிறுத்தம் ஏற்படும் வரை காத்திருந்து, தற்போது உலக நாடுகளின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கமேனிக்கு நெஞ்சார்ந்த மிகப்பெரிய பிரியாவிடை கொடுக்க ஈரான் திட்டமிட்டிருக்கிறது.

இஸ்லாமிய சட்ட விதிகளுக்குள் இத்தகைய விலக்குகளைப் பெற்று, 4 மாதங்களுக்குப் பிறகு கமேனியின் இறுதி ஊர்வலத்தை ஈரான் அரசு நடத்துவது சர்வதேச அளவில் டாக்-ஆக இருக்கிறது.

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க

'நித்யானந்தாவின் கைலாசாவோடு தவெக அரசு ராஜாங்கரீதியான உறவா?' - விவரம் என்ன?

நிநித்யானந்தாவின் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் தவெக அரசின் அமைச்சர்களை சந்தித்து ராஜாங்கரீதியான உறவுகள் குறித்து விவாதித்ததாக நித்யானந்தா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.நித்யானந்தாஇ... மேலும் பார்க்க