செய்திகள் :

Iran: "மொஜ்தபா காமேனி இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை; ஆனால்.." - ட்ரம்ப் சொல்வது என்ன?

post image

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில், பிப்ரவரி 28-ம் தேதி, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்தார்.

இதன் பிறகு, அவருடைய மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் அடுத்த உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுவெளியில் காணப்படவில்லை

மொஜ்தபா காமேனி உச்சத் தலைவரான பின், ஒருமுறைக்கூட பொதுவெளியில் காணப்படவில்லை.

அவருடைய தந்தை இறந்த தாக்குதலில், இவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காகச் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் பொதுவெளியில் காணப்படாததற்கு முதலில் காரணம் கூறப்பட்டது.

ஈரான் - மொஜ்தபா ஹொசைனி கமேனி
ஈரான் - மொஜ்தபா ஹொசைனி கமேனி

சந்தேகம்

பின்னர் அவருடைய பாதுகாப்பிற்காக பொதுவெளியில் அவர் வரவில்லை என்று சொல்லப்பட்டது.

அவருடைய தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் இறுதி ஊர்வலத்தில் கூட, மொஜ்தபா காமேனி கலந்துகொள்ளவில்லை.

ஏற்கெனவே ‘மொஜ்தபா காமேனி உண்மையில் உயிருடன்தான் இருக்கிறாரா’ என்று இருந்துவந்த கேள்வி இன்னும் வலுத்தது.

இந்தச் சந்தேகத்திற்குப் பதிலளிப்பதுபோல, ஈரான் அவருடைய வீடியோ கிளிப் ஒன்றைப் பகிர்ந்திருந்தது.

ட்ரம்ப் பதில்

நேற்றைய (ஆகஸ்ட் 26) நேர்காணல் ஒன்றில், அமெரிக்க அதிபர் ட்ரம்பிடன் மொஜ்தபா காமேனி உயிருடன் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ட்ரம்ப், “மொஜ்தபா காமேனி இறந்துவிட்டாரென நான் நினைக்கவில்லை.

அவரது உடலின் இடது பக்கம், கை, கால் என அனைத்துப் பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது உண்மைதான்.

ஆனாலும், அவர் இறந்துவிட்டார் என்று தோன்றவில்லை.

ஒருவேளை அவர் உண்மையிலேயே இறந்துவிட்டாரென்றால், ஈரான் மிகச்சிறப்பாக நாடகமாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று பதிலளித்திருக்கிறார்.

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை... மேலும் பார்க்க

'குற்றம்சாட்டப்பட்ட என்னுடைய மருமகள், JCD பிரபாகர், லீமா ரோஸின்..!'- விஜய் உரைக்கு இ.கருணாநிதி பதில்

நேற்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் முதல் மிசா வரை பலவற்றைக் குறிப்பிட்டுத் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் தி... மேலும் பார்க்க

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க