செய்திகள் :

Iran: ஹார்முஸ் நீர்வழியை மூடிய ஈரான்: போர் பதற்றத்தால் சர்வதேச கப்பல் போக்குவரத்து முடக்கம்!

post image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடிவிட்டதாக ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆலோசகர் இப்ராஹிம் ஜப்பாரி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலையும் தாக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச விதிகளின்படி ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச நீர்நிலையாகக் கருதப்பட்டாலும், அதன் 21 மைல் என்ற குறுகிய அகலம் காரணமாகக் கரையில் இருந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கப்பல்கள் எளிதில் இலக்காகின்றன. நேற்று பஹ்ரைனில் அமெரிக்கக் கொடி ஏந்திய கப்பல் ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து, காப்பீட்டு நிறுவனங்கள் இந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கான "போர் அபாயக் காப்பீட்டை" (War Risk Coverage) ரத்து செய்துள்ளன. ஈரான் தனது சிறிய படகுகள், ட்ரோன் தாங்கி கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் வணிகக் கப்பல்களை அச்சுறுத்தும் எனக் கூறப்படுகிறது.

கப்பல்
கப்பல்

ஈரானின் இந்த அச்சுறுத்தலை முறியடிக்க அமெரிக்காவின் மத்திய கட்டளை (Centcom) தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. "எபிக் ஃபியூரி" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், ஈரானின் ட்ரோன் தாங்கி கப்பலான ஷாஹித் பாகேரி அழிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், ஓமன் வளைகுடாவில் இருந்த 11 ஈரானியக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன.

இதன் மூலம் அந்தப் பகுதியில் ஈரானியக் கப்பல்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் பதற்றமான சூழலில், வான்வழி மற்றும் கடல்வழி ஆதிக்கத்தை நிலைநாட்டி, வணிகக் கப்பல்கள் மீண்டும் பாதுகாப்பாகச் செல்வதற்கான சூழலை அமெரிக்க அதிகாரிகள் உருவாக்குவார்கள் என்று BIMCO கப்பல் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய், பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் கொண்டு செல்லும் உலகின் மிக முக்கியமான இந்த நீர்வழியில் தற்போது கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அதனால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது. எனவே, தற்போதைய நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணம் செய்வது பெரும் ஆபத்தாகவே நீடிக்கிறது.

நாங்குநேரி இரட்டைக் கொலை: `முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?' - விஜய் கேள்வி!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு 9 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக பைக்க... மேலும் பார்க்க

Iran - America: ``4-5 வாரங்கள்தான் போர் திட்டம்... தேவைபட்டால்" ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கிய இந்தப் போர், தற்போது மத்த... மேலும் பார்க்க

தேர்தல்: ``அவசரமாக நேற்று டெல்லி சென்றது ஏன்?" - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தீவிரமாகிவருகிறது. தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரசாரம் என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

Strait of Hormuz : `ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரான் - உலகப் பொருளாதாரத்தையே ஆளும் சிறிய பகுதி!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடுவதற்கு ஈரான் உத்தரவிட்டுள்ளது. இந்தச் செய்தி, வர்த்தக உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

முதியோர், கைம்பெண்கள் வங்கி கணக்கில் கூடுதலாக ரூ.2000 வரவு! - அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்... மேலும் பார்க்க

ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் - ஒரு பார்வை!

'உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி அபகரிக்கிறது....' இது நோபல் பரிசுப் பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் 1950 ஆண்டு வெளியான "The United Fruit Co." என்றப் புகழ்பெற்ற கவிதை நூல... மேலும் பார்க்க