செய்திகள் :

Iran - America: `நியூயார்க் மேயரையே நியமிக்க முடியாதவர் ட்ரம்ப்' – டெல்லியில் ஈரான் அமைச்சர் காட்டம்

post image

டெல்லியில் நடைபெற்று வரும் 'ரைசினா டயலாக்' சர்வதேச மாநாட்டில் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்ஜாதே கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் உரையாற்றிய காதிப் ஜாதே, ``அதிபர் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கோருகிறார். ஆனால் அவரால் நியூயார்க் நகர மேயரைக் கூட நியமிக்க முடியவில்லை. இது ஒரு காலனித்துவ மனப்போக்கு. ஈரானில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரைக் கவிழ்க்க அமெரிக்கா முயற்சிக்கிறது.

பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் வாழ்வா-சாவா போராட்டம்.

ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்ஜா
ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்ஜா

ஈரானால் எந்தத் தூண்டுதலும் இல்லாத நிலையில், இஸ்ரேல் எனும் மாயையாலும், அதிகார அரசியலாலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மேலும், ஒரு நாட்டின் தலைவரைக் குறிவைத்துத் தாக்குவது சர்வதேச விதிகளுக்கு எதிரானது. இந்தியாவின் 'மிலன்' கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய ஈரானின் 'ஐரிஸ் டெனா' கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

ஆயுதங்கள் ஏதுமற்ற நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று வந்த ஒரு விருந்தினரை அமெரிக்கா தாக்கியது சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறலாகும். ஈரான் ஒரு பொறுப்புள்ள தேசம். ஹார்முஸ் ஜலசந்தியின் நிலைத்தன்மைக்கு நாங்களே அச்சாணி. நாங்கள் அதை மூடவில்லை. அவ்வாறு மூடுவதாக இருந்தால் முறைப்படி அறிவிப்போம்" என்று என்றார்.

Christopher Tilak: "உழைக்கும் தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்" - கிறிஸ்டோபர் திலக்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் திலக், மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இன்று திருச்சி ... மேலும் பார்க்க

`முதலமைச்சரே இடைத்தேர்தலில் போட்டியிட்டால்..!' - இடைத்தேர்தல் ஆடுபுலி ஆட்டங்கள்! | அரசியல் ஆடுபுலி 8

`எம்.எல்.ஏ. ஆகாமல் முதலமைச்சர்'அரசியல் ஆடுபுலி 8தமிழ்நாட்டு அரசியலில், எம்.எல்.ஏ. ஆகாதவர்கள், முதலமைச்சர் ஆன ஆடுபுலி ஆட்டங்கள் அவ்வப்போது நடந்துள்ளன. ராஜாஜி, காமராஜர், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்டோர் எம்.... மேலும் பார்க்க

Vijay: `வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுப்பு?' - நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதி கோரும் சங்கீதா

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்று... மேலும் பார்க்க

IRIS Lavan: மீண்டும் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல்: அடைக்கலம் கொடுத்த இந்தியா!

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரான் போர் கப்பலை அமெரி... மேலும் பார்க்க

நேபாளத் தேர்தல் 2026: ராப் பாடகர் டு பிரதமர்; 'ஜென் Z' ஆதரவுடன் முன்னிலையில் பலேன் ஷா!

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 'ஜென் ஸீ' (Gen Z) இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், ராப் கலைஞர... மேலும் பார்க்க

``எப்ஸ்டீன் அழைத்துச் சென்றார்; ட்ரம்ப் என்னை அடித்து.." - பகீர் பாலியல் குற்றச்சாட்டை வைக்கும் பெண்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் ஒருவரின் வாக்குமூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நீதித்துறை, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெ... மேலும் பார்க்க