செய்திகள் :

Irfan: 13 வருட இடைவெளி, 12 கிலோ எடை குறைப்பு - சீரியலுக்குத் திரும்பிய 'சரவணன் மீனாட்சி' இர்ஃபான்!

post image

ஜி தமிழ் சேனலில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கிற 'வாகை சூட வா' சீரியல் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிவிக்குத் திரும்பியிருக்கிறார் நடிகர் இர்ஃபான்.

'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் இர்ஃபான். அந்தச் சீரியலில் ஓரளவு அறிமுகம் கிடைத்ததும், தொடர்ந்து 'சரவணன் மீனாட்சி' தொடரில் கமிட் ஆனார்.

அந்தச் சீரியலின் இரண்டாவது சீசனில் ரச்சிதாவுடன் முதன் முதலில் ஜோடி சேர்ந்தது இவர்தான். இர்ஃபான் - ரச்சிதா காம்பினேஷனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஒரு கட்டத்தில் சினிமா ஆர்வத்தில் டிவியில் இருந்து இவர் ஒதுங்கிய பிறகே, அந்த இடத்துக்கு பிரேம், அவருக்குப் பிறகு ரியோ ஆகியோர் நடித்தனர்.

இர்ஃபான்
இர்ஃபான்

சினிமாவில் 'சுண்டாட்டம்' என்ற படத்தில் நடித்தார். வணிக ரீதியாகப் பேசப்படாவிட்டாலும் படம் மோசமில்லை.

அதன் பிறகு இயக்குநர் சேரனுக்கு வில்லனாக 'ராஜாவுக்கு செக்' என்ற படத்தில் நடித்தார். வில்லன் கேரக்டர் செட் ஆகிறது என மீடியாக்கள் எழுதின.

ஆனாலும் அதன் பிறகு சினிமாவில் பார்க்க முடியவில்லை.

பிக்பாஸ், குக்கு வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஒவ்வொரு சீசனின் போதும் இவருக்கு அழைப்புச் செல்லும். இவர் தொடர்ந்து மறுத்து வந்தார்.

இந்தச் சூழலில்தான் தற்போது புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளார்.

இது தொடர்பாக இர்ஃபானிடம் பேசினோம்.

irfan
irfan

''சீரியல்ல நடிக்க தொடர்ந்து கேட்டுட்டுதான் இருந்தாங்க. நான்தான் மறுத்து வந்தேன். இந்தக் கதை ரொம்ப பிடிச்சிருந்தது. பெரிய சேனல்ல பிரைம் டைம்ல ஒளிபரப்பாக இருக்கு. இடையில கொஞ்சம் வெயிட் போட்டுட்டதால இந்தச் சீரியலுக்காக 12 கிலோ குறைச்சிருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் நான் நடிச்சிட்டிருந்தப்ப பார்த்த ஆடியன்ஸ் சட்டுனு அடையாளம் கண்டுட்டாங்க.

புரொமோ வெளியானதும் ஏகப்பட்ட விசாரிப்புகள். 2கே கிட்ஸ்க்குத்தான் நான் கொஞ்சம் புது ஆளா தெரிவேன்னு நினைக்கிறேன். அவங்களை சீரியலுக்குள் இழுத்துட்டா போதும். அது பண்ணிடலாம்.

மத்தபடி தொடர்ல ஹீரோயினா பவித்ரா நடிக்கிறாங்க. 'சரவணன் மீனாட்சி'யில எனக்கு பாட்டியா நடிச்ச குயிலி மேடம் இதுலயும் பாட்டியாகவே வர்றாங்க. தவிர சீனியர் ஆர்ட்டிஸ்ட் 'மெட்டி ஒலி' காயத்ரி மேடம் நடிக்கிறாங்க. இன்னும் நிறையப் பேர் நடிக்கிறாங்க.

ஷூட்டிங் தொடங்கி போயிட்டிருக்கு. இந்த மாதக் கடைசியில ஒளிபரப்பு தொடங்கும்னு நினைக்கிறேன்" என்கிறார்.

`இன்னைக்கு நாங்க வசதியா, ஒற்றுமையா இருக்க காரணம் அவங்கதான்!' - உருகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின்

``பொம்பளைப் பிள்ளைகள் பிறந்தாலே கள்ளிப் பால் ஊத்திக் கொன்னு போடற காலத்துல உசிலம்பட்டியில பொறந்தவங்க சார் என் அம்மா. ஆனா என் தாத்தா பிரிட்டிஷ்காரங்க காலத்துலயே ஹெட் மாஸ்டரா இருந்ததால அம்மாவும் ப‌டிச்சு... மேலும் பார்க்க

BB 9: `இந்த 3 மாச வாழ்க்கையா அவங்களை மிரட்டிடும்?' - திவ்யா வெற்றி குறித்து நெகிழும் கம்பம் மீனா

நூறு நாட்கள் கடந்து ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 9, முடிவடைந்து வைல்டு கார்டு போட்டியாளராகச் சென்ற திவ்யா கணேஷ் டைட்டிலையும் வென்று விட்டார்.திவ்யா கணேஷுடன் 'பாக்கியலட்சுமி' தொடரில் நடித்த கம்பம் ம... மேலும் பார்க்க

Serial Update: டைட்டில் மாறி, வெளிவரும் ரியாலிட்டி ஷோ டு மீண்டும் சீரியலுக்கு திரும்பிய ஹீமா பிந்து!

அதே டெய்லர் அதே வாடகை!ஜீ தமிழ் சேனலில் 'மிஸ்டர் அன்ட் மிசஸ் கில்லாடிஸ்' என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பானதே நினைவிருக்கிறதா? ஐந்தாறு ஆண்டுகளுக்கு்முன் அடுத்தடுத்து ஒளிபரப்பான இரண்டே இரண்டு சீசன்களுக்குப் ப... மேலும் பார்க்க

BB TAMIL 9 FINALE: டைட்டில் வென்ற திவ்யா; பாருவின் என்டரி - ஃபைனலிஸ்ட்டுகளின் பலமும் பலவீனமும்!

இந்த ஒன்பதாவது சீசனின் டேக்லைன் இப்படியாக இருந்தது. ‘ஒண்ணுமே புரியலையே’... திவ்யாவின் தடாலாடியான வெற்றியும் அதைத்தான் நமக்கு சொல்கிறது. ‘ஒண்ணுமே புரியலையே’!எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிற லேபிளில் ... மேலும் பார்க்க

BB Tamil 9: "எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!"- டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் எமோஷனல்

கடந்த அக்டோபர் மாதம் ஒளிப்பரப்பாக தொடங்கிய 'பிக் பாஸ்' சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று (ஜன.18) நடைபெற்றது. இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சோஷியல் மீடியா க... மேலும் பார்க்க