செய்திகள் :

ISRO: நெருக்கடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்; 100 விஞ்ஞானிகள் வேலையை ராஜினாமா செய்தது ஏன்?

post image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ராக்கெட்கள், செயற்கை கோள்களைத் தயாரித்து விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதோடு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இத்திட்டத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தங்களது வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் 120 விஞ்ஞானிகள், இயக்குநர்கள், உயர் தொழில்நுட்ப வல்லுனர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள விண்ணெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து மட்டும் 80 பேர் தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 20 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இங்குள்ள திட்ட இயக்குனர் விக்டர் ஜோசப் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்

சமீபத்தில் இந்தியாவில் விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைய மத்திய அரசு அனுமதி கொடுத்தது. எனவே அது சார்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகிறது. இந்தத் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் சம்பளம் கொடுக்க முன்வருவதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் இயக்குநர்கள் இஸ்ரோவில் இருந்து விலகி தனியார் நிறுவனங்களில் சேர ஆரம்பித்துள்ளனர்.

இதனால் இஸ்ரோ செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்களை முன்னெடுத்துச்செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விருப்ப ஓய்வு பெறுதல் மற்றும் பணியில் இருந்து விலகுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை இஸ்ரோ மைய இயக்குநர்கள் விருப்ப ஓய்வுக்கு அனுமதி கொடுத்து வந்தனர். ஆனால் இப்போது அவர்களிடமிருந்து அந்த அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இனி விஞ்ஞானிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியிலிருந்து விலக அல்லது விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தால் அது தொடர்பான மனுக்களை இஸ்ரோவின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் பதவி விலகுவதை இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி படுத்தினார். ஆனால் இந்த நெருக்கடியில் இருந்து வெளியில் வர முடியும் என்றும் ஒவ்வொரு நிறுவனமும் இது போன்ற நெருக்கடியைச் சந்திக்கக்கூடிய ஒன்றுதான் என்றும் தெரிவித்தார்

`21 ஆண்டில் 25 முறை இடமாறுதல்' - IAS அதிகாரியின் நடடிக்கையால் கலக்கத்தில் பால்பண்ணைகள், உணவகங்கள்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. 2005ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான துகாராம் முண்டே, தான் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் துணிச்சலுடன் செயல்ப... மேலும் பார்க்க

வாழ்க்கையை மாற்றிய மகள், மனைவியின் பிறந்தநாள் - அபுதாபியில் மலையாளிக்கு அடித்த ரூ.68 கோடி லாட்டரி!

வாழ்க்கையை மாற்றுவது எது? முடிவில்லாத உழைப்பா அல்லது ஒரே ஒரு தருணத்தில் கதவைத் தட்டும் அதிர்ஷ்டமா? இந்த கேள்விக்கு அபுதாபியில் வசிக்கும் சுனில் குமார் சதாசிவன் என்ற இந்தியரின் வாழ்க்கை இப்போது ஒரு பதி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: `வராத குடிநீருக்கு வரி' மல்லிகைப்பூ, அல்வா, காலிக்குடம்... திமுக கவுன்சிலர் போராட்டம்!

புதுக்கோட்டை மாநகராட்சியின் 42-வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களுக்குக் குடிநீரே வழங்... மேலும் பார்க்க

ஈரோடு: பழைய இரும்பு வியாபாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.8 கோடி பணம் - அதிர்ச்சியில் GST அதிகாரிகள்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான செல்வக்குமார் பெருந்துறை அருகில் உள்ள ஈங்கூர் பகுதியில் பழைய இரும்பு வியாபார கடை நடத்தி வருகிறார். வேறு சில தொழில்களும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந... மேலும் பார்க்க

அமெரிக்காவை உலுக்கிய லேசி பீட்டர்சன் கொலை வழக்கு: தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கும் புதிய ஆவணப்படம்!

அமெரிக்காவின் நீதித்துறை வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லேசி பீட்டர்சன் கொலை வழக்கில், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. தனது கர்ப்பிணி மனைவியைக் கொன்றதாகக் குற்... மேலும் பார்க்க

`தீர்ப்பு சாதகமா வரணும்' - நீதிபதியின் இருக்கையில்`வெள்ளை கடுகு' தூவி பில்லிசூனியம் வைத்த பெண்

சிவில் வழக்கு ஒன்றில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன், கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் மேடை, மேஜை மற்றும் தலைமை அதிகாரி அமரும் நாற்காலிக்கு அருகில் வெள்... மேலும் பார்க்க