செய்திகள் :

Jana Nayagan: "ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க!" - சரத்குமார்

post image

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது.

ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயகன் | விஜய்
ஜனநாயகன் | விஜய்

தணிக்கைத் துறை அதிகாரிகள் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படத்தை முடக்குகிறார்கள் என பல்வேறு தரப்புகளிலிருந்து தணிக்கைத் துறைக்கு கண்டனங்கள் வலுத்தன.

இந்நிலையில் சரத்குமார் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார்.

சரத்குமார் பேசுகையில், "சென்சார் போர்டு அவங்க வேலையைப் பார்த்துட்டு இருக்காங்க. அவங்க இதுக்கு முன்னாடி எவ்வளவோ படங்களை நிறுத்தியிருக்காங்க. 'தக் லைஃப்' படத்துக்கு அது நடந்திருக்கு.

ஜெயலலிதா அம்மா ப்ரீயடிலும் விஜய்க்கு அது மாதிரி நடந்திருக்கு. அதனால, இது மாதிரிலாம் நடக்கிறது அரசியல் கிடையாது.

எல்லாமே அரசியலாகத்தான் நடக்குதுங்கிற எண்ணத்தை முதல்ல மாத்தணும். அந்த படத்துல ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க.

நடிகர் சரத்குமார்

மக்களை முன்னிறுத்தித்தான் சென்சார் போர்ட்ல உறுப்பினர்கள் படத்தைப் பார்க்கிறாங்க. அரசியல்வாதிகள் அங்கு கிடையாது.

'ஜனநாயகன்' படம் ரிலீஸ் ஆகணும்னு ஆசை அனைவருக்கும் இருக்கும். படமெடுக்கிறது ரொம்ப கஷ்டம், அது ரிலீஸ் ஆகணும். ஆனா, அது சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்கணும்.

எதிர்க்கட்சிகளுக்கு வேற வேலை இல்ல. எதை அரசியல்படுத்தணும், எதை மக்களுக்கு கொண்டு போகணும்னு தெரியல. நம்ம நாடு ஜனநாயக நாடு. அதை விட்டுட்டு 'ஜனநாயகன்' சினிமாவைப் பத்தி பேசுறதுதான் உங்களுக்கு முக்கியமா தெரியுது!?" எனக் கூறியிருக்கிறார்.

Arasan: வேகமெடுக்கும் 2வது கட்ட ஷூட்டிங்; 2 ஹீரோயின்கள்; சிலம்பரசனின் புது Getup; அசத்தும் அப்டேட்ஸ்

தமிழ் சினிமாவில் இப்போதைய 'அரசன்' சிலம்பரசன்தான். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'அரசன்' முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் மதுரையில் நடந்து முடிந்திருக்... மேலும் பார்க்க

"சோகமான காட்சிக்கு 1,2,3,4; கோபமான காட்சிக்கு A, B, C, D" - வைரலாகும் மாளவிகா மோகனின் பதில்

நடிகை மாளவிகா மோகனனிடம் நேர்காணல் ஒன்றில் பிற மொழிகளில் நடிப்பவர்களுக்கு இருக்கும் சவால் பற்றி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. "எந்த மொழியில் உங்களுக்கு ஆள... மேலும் பார்க்க

பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார் - அதிகாலையில் உயிர் பிரிந்த சோகம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 40,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார்... மேலும் பார்க்க

Rajini:``அவர்கள் என்னை 'டேய் சிவாஜி' என அழைத்து பேசும்போது" - குதூகலத்துடன் பேசிய நடிகர் ரஜினி

கோவை வேளான் பல்கலைக் கழகத்தில் 1975 - 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் க... மேலும் பார்க்க