Stephen: "ஒரு Shortfilm-ல ஆரம்பிச்ச கதை தான் Stephen" - Gomathi Shankar & Mithun...
Kalamkaval: "சத்தமாக நடிப்பது ரொம்ப சுலபம்; நிதானமாக நடிப்பதுதான் கஷ்டம்" - நடிகர் விநாயகன்
ஜிதின் ஜோஸ் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் மலையாளத் திரைப்படம் ‘களம்காவல்’.
இதில் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிச.5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சமீபத்திய புரொமோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விநாயகன், "இப்படத்தில் மம்மூட்டிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
என்னுடைய கதாபாத்திரத்திற்கு மம்மூட்டியே பெயர் வைத்தார். இது என் வாழ்நாள் அதிர்ஷ்டம்.
அவருடன் நடிப்பது எளிதாக இருந்தது. வசனங்களில் அவர் நிறைய உதவினார்.
சத்தமாக நடிப்பது ரொம்ப சுலபம். நிதானமாக நடிப்பதுதான் கஷ்டம். இயக்குநர் ஜிதின் என் கை, கால்களைக் கட்டிப்போட்டு, என்னை நடிக்க வைத்தது போல தோன்றியது.
'நீங்க எதுவும் செய்ய வேண்டியதில்லை. நான் சொன்னதைச் செய்தால் போதும்' என்று சொல்லி நடிக்க வைத்தார்" என்று சிரித்துக்கொண்டே தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "பொதுவெளியில் எப்படிப் பேசவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.
ஆர்வம் இருந்தாலும் மக்களின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து பேசுவதில் பிரச்னை இருக்கிறது.
என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. யாராவது ஒருவர் தேவையில்லாத கேள்விகளைக் கேட்பது கோபமாக்கிவிடுகிறது.
நான் என்ன பேசுகிறேன் எனத் தெரியாமல் பேசிவிடுகிறேன். இதனால் பொதுவெளிக்கு வருவதைத் தவிர்த்துவிட்டேன்" என்று கூறியிருக்கிறார்.




















