Anupama Parameswaran: "காட்டுப்பேச்சி நீ.. பாட்டுப்பேச்சி நீ!" - அனுபமா க்ளிக்ஸ்...
Kalamkaval: "ஹீரோவுக்கென சில கட்டுப்பாடுகள் இருக்கு, ஆனா.!"- நடிகர் மம்மூட்டி
ஜிதின் ஜோஸ் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் மலையாளத் திரைப்படம் ‘களம்காவல்’.
இதில் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிச.5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சமீபத்திய புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மம்மூட்டி, " ரொமான்டிக்கான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினால், எனக்கு அந்தக் கதாபாத்திரங்கள் கட்டாயம் கிடைக்கும்.
ஆனால், நீங்கள் சீனியர் நடிகர் ஆகிவிட்ட பிறகு உங்களுக்கு இன்னமும் நிறைய கோணங்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களைச் செய்ய முடியும்.
ஹீரோவுக்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. இப்போது அதுவும் கொஞ்சம் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், வில்லனுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை வில்லன் என்று கூறமாட்டேன். அதேநேரத்தில் அவன் நல்லவனும் கிடையாது.
இந்த மாதிரியான கதாபாத்திரத்தை அசாத்திய தைரியத்தின் விளைவால் எடுத்தேன் எனச் சொல்லமுடியாது. இப்படியான கதாபாத்திரங்களைச் செய்யவேண்டும் என்கிற வேட்கைதான் அதற்குக் காரணம்.

எனக்குள் இருக்கும் நடிகனை திருப்திப்படுத்த வேண்டும். நான் ஒரு நட்சத்திரமென அழைக்கப்படுவதில் எனக்குப் பிரச்னையில்லை. ஆனாலும் ஒரு நடிகனாக இருப்பதையே விரும்புகிறேன்" என்று மம்மூட்டி கூறியிருக்கிறார்.



















