செய்திகள் :

Kanimozhi: "காவிரிப் பிரச்னையைத் திசைதிருப்பத் த.வெ.க அரசு நடத்தும் நாடகம்தான் இது!" - கனிமொழி

post image

தொகுதி மறுவரையறை மசோதா குறித்துப் பேச அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது தவெக அரசு.

ஆனால், இதில் திமுக எம்.பி-க்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்தும், இது காவிரிப் பிரச்னையைத் திசைதிருப்பத் த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் எனக் குறிப்பிட்டு திமுக எம்.பி கனிமொழி பதிவிட்டிருக்கிறார்.

கனிமொழி கண்டனம்
கனிமொழி கண்டனம்

அந்தப் பதிவில் அவர், "தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் #FairDelimitation என்பதிலும் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப்போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை. இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம்.

அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது, முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா?

காவிரிப் பிரச்சினைக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரிப் பிரச்சினையைத் திசைதிருப்பத் த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம்.

எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.

உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

தவெக வைத்த பொறியில் சிக்கியதா திமுக? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவை நெருங்கும் திமுக!

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் விஜய் ஏற்பாடு செய்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுகவும் அதிமுகவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இத... மேலும் பார்க்க

ராஞ்சி தேர்வு முறைகேடு: ``கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும்" - மாணவர்கள் அமைப்பு உறுதி

டெல்லியில் ஜந்தர் மந்தரில் அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியது போல, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், JPSC, JSSC தேர்வு முறைகேடுகளு... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமானப் பணிகள் தீவிரம் - 8 மாதங்களில் முடிக்க திட்டம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற... மேலும் பார்க்க

பழனி நில மோசடி விவகாரம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஜாமீனை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான,1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி தனி நபர்கள் இருவரது பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன... மேலும் பார்க்க

"முதல்வர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வரும் என்பதால் அமைதியாக இருக்கிறார்!" - செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாரம்பர்ய காங்கேயம் நாட்டு மாடுகள் அழகுப் போட்டிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த நிகழச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி உள... மேலும் பார்க்க

All Party Meet: "விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியலை விட முக்கியம்!" - டி.கே. சிவக்குமார்

காவிரி நீர் பகிர்வு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கர்நா... மேலும் பார்க்க