செய்திகள் :

Karuppu: "அதுக்கு பட்ஜெட் இல்லப்பா!" - 'சிங்கம்' போலீஸ் காட்சி குறித்து ஆர்.ஜே. பாலாஜி

post image

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான 'கருப்பு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆர்.ஜே. பாலாஜியின் பச்ச சட்ட பாட்காஸ்டிற்குத் தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

ஸ்பாட்டிஃபை நடத்திய 'பச்ச சட்ட - The Resurgence' நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 'பச்ச சட்ட' பாட்காஸ்ட் ரசிகர்களைச் சந்தித்து உரையாடினார் ஆர்.ஜே. பாலாஜி.

RJ Balaji
RJ Balaji

ஆர்.ஜே. பாலாஜி பேசுகையில், "'மூக்குத்தி அம்மன்' படத்துக்கு மூணு டிக்கெட் கேட்ட மாதிரிக் காட்சி வருது. அது லாஜிக் மிஸ்டேக். ஆனா அந்தப் படம் தியேட்டர்லயே ரிலீஸ் ஆகலை.

அது எனக்கே தெரியும். வேற யாராவது டைரக்டர் படத்தை வச்சிருந்தா, 'என்னய்யா என் படத்தை இப்படி வச்சு காமெடி பண்ணிட்டீங்க'னு நினைப்பாங்க. எதுக்கு வம்புன்னுதான் என் சொந்தப் படத்தையே வச்சுட்டேன்.

படத்தோட இன்டர்வெல் காட்சியில நாலு ஷாட்ல கிராபிக்ஸ் வேலைகள் சுத்தமா நல்லாவே இருக்காது. பிறகு அதை மாத்திட்டோம். பிறகு கிளைமேக்ஸ்ல வர்ற சிங்கம் சூர்யாவுக்கு திடீர்னு மூஞ்சி அப்படி ஆயிடுச்சேன்னு கேக்குறீங்களா?

அதுக்கு பட்ஜெட் இல்லப்பா!" என நகைச்சுவையாகச் சொன்னவர் 'கருப்பு' படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறித்து, "நான் தியேட்டர்ல போய் 'காந்தாரா' படம் பார்த்தப்போ, அங்கிருந்த மக்கள் எல்லாரும் அந்த ஒரு சீனை மெய்மறந்து பார்த்தாங்க.

நமக்குத் தெரியாத சாமியை, தியேட்டர்ல மக்கள் இவ்வளவு பிரமிச்சுப்போய் பார்க்கிறாங்களே, அப்போ நம்ம ஊரு சாமியை வச்சு நாம ஏன் இந்த மாதிரி ஒரு விஷயம் பண்ணக் கூடாதுனு தோணுச்சு.

Karuppu Movie
Karuppu Movie

அப்படி அந்தப் படத்துல இருந்து இன்ஸ்பையர் ஆகிச் சேர்த்ததுதான் இந்த கிளைமேக்ஸ் காட்சி. மத்தபடி கதையில கூடுதலாக எதுவுமே சேர்க்கல.

எல்லாமே எழுதும்போது என்ன இருந்ததோ அதுதான். படத்துல பெருசா டான்ஸ் ஆடுற மாதிரி பாட்டுகள் இல்லைங்கிறதால, எல்லா ஃபைட் சீன்களையுமே பாடல்களோடு சேர்த்துக்கலாம்ங்கிற முடிவை முன்னாடியே எடுத்துட்டோம்" என்றார்.

"அவரது கதாபாத்திரங்கள் சினிமாவிற்கு வர நினைக்கும் இளம் பெண்களுக்கு..!"- மமிதா குறித்து சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கி... மேலும் பார்க்க

Brothers & Sisters: "அதனுடைய அருமை இப்போ புரியலைனாலும்..." - ஃபேமிலியுடன் நடிப்பது பற்றி ராஜ் ஐயப்பா

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ்க்கு நல்ல வரவேற்பும், பாராட்டுங்களும் கிடைத்திருக்கின்றன. போஸ் வெங்கட், காயத்ரி, நிகிலா சங்கர், ராஜ் ஐயப்பா ஆகியோர் நடிக்கும... மேலும் பார்க்க

"‘நாட்டாமை குடும்பம்’னு பச்சை குத்திக்கோங்க" - சரத்குமார் சொன்ன 'கிரீன் கார்டு' ஐடியா

நடிகர் மற்றும் பாஜக நிர்வாகி சரத்குமார் தன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.இதில் சரத்குமாரின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டன... மேலும் பார்க்க

"இங்கே ஜாதி சான்றிதழ் வாங்குவது எளிது; ஆனால்..." - சொல்கிறார் நடிகர் பார்த்திபன்

வித்தியாசத்தின் மறுபெயரான நடிகர் - இயக்குநர் பார்த்திபன், அண்மையில் 'சாதி, மதம் அற்றவர்' என்ற சான்றிதழ் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இதன் பின்னணியில் பல்வேறு சம்பவங்கள் வரிசைகட்டுகின... மேலும் பார்க்க

Toxic: "பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்; ஆனால்..." - யஷ்ஷைப் புகழ்ந்து பேசிய நயன்தாரா

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

"அன்னைக்கு அழுதிட்டு இருந்தேன்; இன்னைக்கு சூர்யா சாரோட..." - நினைவுகளைப் பகிர்ந்த மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கி... மேலும் பார்க்க