செய்திகள் :

Karuppu: ரஜினியின் பாராட்டு, ஆமீர் கான் சூர்யாவுக்கு அனுப்பிய மெசேஜ்! - மகிழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி

post image

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் படத்திற்கு மக்களின் வரவேற்புக் கிடைத்து வருகிறது.

த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா ரவி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். படத்தின் ரிலீஸுக்குப் பிறகு நம் சினிமா விகடன் சேனலுக்கு ஆர்.ஜே. பாலாஜி பேட்டியளித்திருக்கிறார்.

Karuppu BTS
Karuppu BTS

'கருப்பு' படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், ஆமீர் கான், சிம்பு ஆகியோர் பாராட்டியதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

"என் மனசுல இதெல்லாம் நடக்கும்னு நான் யோசிச்சிருக்கேன். ரஜினி சார் பேசினார். சூர்யா சாருக்கு அமீர்கான் சார் மெசேஜ் அனுப்பிச்சாரு. சிம்பு பேசினாரு. இது மாதிரி பெரிய இயக்குநர்கள் நிறைய பேர் பேசினாங்க.

உண்மையில இவங்க எல்லாரும் பேசணும்னு அவசியமே இல்லை. படம் பார்த்துட்டு, 'படம் நல்லாருக்கு, பரவாயில்லை இது இப்படி இருக்கு, அது அப்படி இருக்கு'னு அவங்களுக்குள்ளேயே பேசிட்டுப் போயிருக்கலாம்.

ஆனா இவங்க எல்லோரும் பெரிய மனிதர்கள். இன்னொருத்தருக்கு போன் பண்ணி, 'படம் நல்லா இருந்தது'னு பாராட்டுற நல்ல மனசு அவங்களுக்கு இருக்கு. ரஜினி சார் பேசும்போது எனக்கு அப்படித்தான் இருந்தது.

RJ Balaji - Karuppu - Rajinikanth
RJ Balaji - Karuppu - Rajinikanth

ஏன்னா நம்ம சின்ன வயசுல இருந்து நிறைய படங்கள் நல்லா ஓடும்போது, 'இப்போதான் சூப்பர் ஸ்டார் கால் பண்ணாரு'னு ட்வீட் பார்த்திருப்போம். பேப்பர்ல அதையே ஒரு விளம்பரமா போடுவாங்க. அதுமாதிரி ஒரு சிறப்பான தருணம்தான் இது.

நான் சின்ன வயசுல இருந்தே ரஜினி சாருடைய தீவிரமான ரசிகன். எனக்கு விவரம் தெரிஞ்சு நான் தியேட்டர்ல போய் பார்த்த 'பாட்ஷா', 'படையப்பா', 'அண்ணாமலை', 'முத்து' போன்ற எல்லாப் படங்களுமே எனக்குப் பிடிக்கும்.

இதெல்லாம் என்னோட வாழ்க்கையில ரொம்ப முக்கியமான நினைவுகள். 'நம்ம வாழ்க்கையில இது நடந்திருக்குல்ல'னு மனசுல ஆழமாகப் பதியும். இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம். அது இப்ப நடக்கும்போது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு" எனக் கூறியிருக்கிறார்.

`உங்களுக்கு வேண்டாம் என்று தோன்றினால்.!' - `கருப்பு' படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து ஆர்யா

தமிழ் - மலையாளம் பைலிங்குவல் திரைப்படமாக, ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கிறது 'அனந்தன் காடு' திரைப்படம். இந்தப் படம் ஜூன் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடைசியாக ஆர்யா நடிப்பில் 'மிஸ்டர் எக்ஸ்... மேலும் பார்க்க

Love Oh Love: "பவிஷூடைய குரல் சில சமயங்களில் தனுஷ் குரல் மாதிரியே இருக்கும்" - கே.எஸ். ரவிக்குமார்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தி... மேலும் பார்க்க

Love Oh Love: "செல்வா சார் வீட்டுல பாசமாதானே இருப்பாரு எதுக்கு பயப்படுறாஙகனு நினைச்சேன்!" - பவிஷ்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தி... மேலும் பார்க்க

"முடிவில்லாத ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தேன்; ஆனால் இப்போது..." - நடிகை சமந்தா உருக்கம்

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் ஜூன் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை ராஜ் ந... மேலும் பார்க்க

`அதே அரவணைப்பு, எளிமை...' - முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி

தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்-யை, பிரபல நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பல திரைப்படங்களில் கதா... மேலும் பார்க்க

சாருகேசி விமர்சனம்: ஒய்.ஜி நாடகத்தைப் படமாக அரங்கேற்றியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா! கவனம் பெறுகிறதா?

பிரபலமான கர்னாடிக் சங்கீத வித்வானாக இருக்கும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரன்) தனது மனைவி, மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். தந்தையின் புகழ் தன்னுடைய தனித்துவத்தை மறைப்பதாக எண்ணும் சாருகேசியின் மகன் ... மேலும் பார்க்க