செய்திகள் :

Ken-Betwa Link Project: பழங்குடியின மக்களின் நீண்ட போராட்டம் - வலுகட்டாயமாக வெளியேற்றிய காவல்துறை

post image

மத்தியப் பிரதேசத்தின் பந்தேல்கண்ட் பகுதியில் கடந்த ஜூலை 3-ம் தேதி முதல், 17 நாட்களாகத் தொடர்ந்து அனல் பறந்து கொண்டிருந்த 'சிதா அந்தோலன்' (Chita Andolan) போராட்டம், தற்போது காவல்துறையினரின் தலையீட்டால் முடிவுக்கு வந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மற்றும் பன்னா மாவட்டங்களின் எல்லையில் பாயும் கென் (Ken) நதியின் உபரி நீரை, வறட்சியால் தவிக்கும் பெட்வா (Betwa) நதிக்குக் கொண்டு செல்லும் இந்தியாவின் முதல் பெரும் நதிகள் இணைப்புத் திட்டமான "கென்-பெட்வா இணைப்புத் திட்டம்" (Ken-Betwa Link Project) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுமார் ₹44,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த 'தௌதான் அணை' (Daudhan Dam) மற்றும் கால்வாய்ப் பணிகளுக்காக, இப்பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் சுமார் 24 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பன்னா புலிகள் காப்பகத்தின் (Panna Tiger Reserve) பெரும் பகுதியும் இதனால் பாதிக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள பழங்குடியின மக்கள், தங்களுக்கு நியாயமான மறுவாழ்வுத் திட்டமும் தகுந்த இழப்பீடும் வழங்கக் கோரி பல மாதங்களாகப் போராடி வருகிறார்கள்.

சிதை போராட்டம் (Chita Andolan):

2026 ஏப்ரல் மாதத்தில், இப்பகுதிப் பழங்குடியினப் பெண்கள் சத்தர்பூரின் பரானா ஆற்றுப் படுகையில் எரியும் விறகுச் சிதைகள் போல அமைக்கப்பட்ட மரக்கட்டைகளின் மீது படுத்து போராடினர். "எங்கள் வாழ்வாதாரத்தைப் பறித்து எங்களை அப்புறப்படுத்துவது, எங்களை உயிரோடு சிதையில் ஏற்றுவதற்குச் சமம்" என குமுறுகின்றனர். தங்களுக்குரிய இழப்பீடான ₹25 லட்சம் முழுமையாகக் கிடைக்காததால் மீண்டும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

ஜூலை 2026 இல், பரானா ஆற்றின் பாலத்தின் அடியில் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு போராடும் அளவுக்குத் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர் .

themooknayak

மத்தியப் பிரதேச அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பிய இந்தப் போராளிகளை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உமங் சிங்கார் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அதன் பிறகு, சத்தர்பூர் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும், ஜூலை 19 அதிகாலையில் சம்பவ இடத்திற்குப் பெருமளவில் விரைந்தனர்.

ஆற்றுக்குள் சிதைப்படுக்கைகளில் அமர்ந்திருந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட பழங்குடியினப் போராட்டக்காரர்களைப் போலீஸார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி, வாகனங்கள் மூலம் தற்காலிகமாகத் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

CJP: ``நாடாளுமன்றத்தில் இணையம் துண்டிப்பு; ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒத்திவைப்பு" - சு. வெங்கடேசன்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என சிஜேபி அமைப்பு டெல்லியில் போராட்டத்தை முன்னெடு... மேலும் பார்க்க

'தோலை உரிப்பேன், எலும்பை உடைப்பேன்' - முதல்வரை 'இறங்கி' அட்டாக் செய்வதன் பின்னணியும் பின்விளைவும்

'சட்டசபைக் கதவை மூடிப் பார், உன் எலும்பை உடைக்கிறோம்' என முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டு மேடையில் முழங்கி (?) கைதாகியிருக்கிறார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்.திமுகவில் ஏற்கனவே வெற்... மேலும் பார்க்க

CJP: ``நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகரிலும் எதிரொலிக்கிறது" - உதயநிதி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசு தேர்... மேலும் பார்க்க

CJP: மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்த சிஜேபி அமைப்பினர் - கொடுத்த கடிதத்தில் என்ன இருந்தது?

நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பில் போராட்ட... மேலும் பார்க்க

`பாஜக-வை கோபப்படுத்தாத நாடாளுமன்ற அரசியலை நோக்கி.!' - திமுக, பாஜக கைகோர்க்குமா?

தவெக-வின் வெற்றி தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகளைப் பெரிய அளவில் மாற்றியமைத்து வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பிரதானக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. அந்தவகையில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

``முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலக்க கேரள அரசு அனுமதிக்கக் கூடாது" - ஜெகநாத் மிஸ்ரா

தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் ... மேலும் பார்க்க