செய்திகள் :

KH x RK Update: விரைவில் ஒரு Glimpse Video; நெல்சன் க்ளிக் ஆக இதான் காரணம்! ஷூட்டிங் எப்போது?

post image

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கலைஞர்களான கமல்ஹாசன் - ரஜினிகாந்த் 47 வருடங்களுக்குப் பிறகு ரீயூனியன் ஆகும் 'KH x RK' படத்தின் புரொமோ வீடியோ இன்று வைரலாகியுள்ளது.

நெல்சன் இயக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்போது வெளியான கிளிம்ஸ் வீடியோ சின்ன சாம்பிள்தான் என்றும், அதன் தொடர்ச்சி வீடியோவைச் சில வார இடைவேளைக்குப் பின் வெளியிடவுள்ளனர் என்றும் தகவல்கள் வருகின்றன. பிரமிக்க வைக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது இருக்கும் என்பது குறித்து விசாரித்தோம்.

KH x RK
KH x RK

கமல் - ரஜினி இருவருக்குமே இப்போது கைவசம் கமிட்மென்ட்கள் இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் வருவதால் கமல் பிரசாரத்திற்குச் செல்லவிருக்கிறார். அதன் பின் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிலும், அதனைத் தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கும் செல்கிறார்.

அதைப்போல ரஜினியைப் பொறுத்தவரை 'ஜெயிலர்2'வை முடித்து கொடுத்துள்ளார். இப்போது அதன் பேட்ச் ஒர்க் வேலைகள் ஒரு பக்கம் நடந்துக்கொண்டு இருக்கின்றன. பேட்ச் ஒர்க்கில் ரஜினியின் போர்ஷன் எப்போது தேவைப்பட்டாலும் நடித்துக் கொடுக்க ரெடியாக இருக்கிறார் ரஜினி.

அவரைப் பொறுத்தவரையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளையும், எதிர்பார்ப்புகளைத் தூண்டுவதையும் பாணியாக வைத்துள்ளார். 'வேட்டையன்' சமயத்தில்தான் 'கூலி'யின் அப்டேட் வெளியானது.

அதைப்போல 'ஜெயிலர் 2'வில் இப்போது போல நெல்சன், அனிருத்தின் புரொமோ வீடியோவும் வெளியானது. ஏப்ரலில் 'டான்' சிபிசக்கரவர்த்தி இயக்கும் படத்திற்குச் செல்கிறார் ரஜினி. இப்படி ஆக, இந்தாண்டின் கடைசியிலோ அல்லது அடுத்தாண்டின் துவக்கத்திலோதான் கமல்ஹாசன் - ரஜினிகாந்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அனிருத், நெல்சன்
அனிருத், நெல்சன்

ரஜினி - நெல்சன் கூட்டணியின் மேஜிக் ரஜினி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. இயக்குநர் எஸ்.முத்துராமனுக்குப் பிறகு அவரை வைத்து அதிகமாக இயக்கியவர் டைரக்டர்கள் ராஜசேகர், கே.எஸ்.ரவிக்குமார் என்பார்கள். ஆனால் ஒரே இயக்குநருக்குத் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்கள் கிடைத்திருப்பது நெல்சனுக்குதான் என்கிறார்கள்.

இப்போது ரஜினியின் காம்பினேஷனில் ஹாட் ரிக் அடித்திருக்கிறார் நெல்சன். எப்போதும் போல எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசி மகிழும் நெல்சன், படப்பிடிப்பில் அதே கலகலப்புடன், கோபம் கொஞ்சமும் இல்லாமல் அமைதியாக எல்லோரிடமும் இன்முகத்துடன் வேலை வாங்கும் ஸ்டைலும், சூப்பர் ஸ்டாரை அவர் ரொம்பவே சௌகரியமாக வைத்திருப்பதும்தான் இந்த வெற்றிக் கூட்டணிக்கான காரணம் என்கிறது ரஜினி வட்டாரம்.

Nelson | நெல்சன்
Nelson | நெல்சன்

கமல் - ரஜினியின் இந்தப் படத்தில் டெக்னீஷியன்கள் மட்டுமே இப்போது முடிவாகியிருக்கிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு, நிர்மல் எடிட்டிங், பல்லவிசிங், அம்ரிதா ராம் காஸ்ட்யூம்ஸ், சவுண்ட் டிசைனர்கள் எனச் சிலர் உறுதியாகியிருக்கிறார்கள். படத்தில் சூப்பர் ஸ்டார்கள் இணைந்திருந்தாலும், நெல்சனின் ஸ்டைலில் இதுவும் மல்டி ஸ்டார் படமாக ரெடியாகும் என்கிறார்கள்.

`முத்தமழை இங்கு கொட்டி தீராதோ'..! சென்சேஷனல் ஹிட் பாடல் உருவானது எப்படி? | வரித்துணையே 03

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

`முதல்வர் கலந்துகிடுவார்னு தெரிஞ்சிருந்தா கல்யாணத்தை பெரிசா பண்ணியிருப்பேன்!' - நடிகர் டெலிபோன் ராஜ்

சென்னையில் நேற்று நடந்த நடிகர் டெலிபோன் ராஜின் மகன் சித்தார்த்தன் திருமணத்தில் சினிமா, டிவி பிரபலங்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொள்வாதாக இருந்ததாம். ஆனால் கடை... மேலும் பார்க்க

Chiyaan Vikram: "சில நேரங்களில் மௌனம்..." - அடுத்தடுத்த 4 படங்கள்; அப்டேட் கொடுத்த நடிகர் விக்ரம்!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் இடத்தில் ஒரு இருக்கையைப் பதிவு செய்திருப்பவர் நடிகர் சியான் விக்ரம். நடிப்புக்காக உடலை வருத்திக்கொண்டு கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பதற்கு இவர் ஒரு உதாரணம் என ரசிக... மேலும் பார்க்க

`கேக்குறாருல சொல்லுங்க ஜி... யாரு ஹீரோ?' - வெளியான ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் ப்ரோமோ விடியோ பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, பட... மேலும் பார்க்க

KH x RK: `அந்த நாள் இன்றுதான்! நேரம்: நண்பகல் 12:07 மணி' - ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

தென்னிந்திய திரை ஆளுமைகளில் தங்களுக்கென தனித் தனிப்பாதைகளை உருவாக்கி பயணித்த நடிகர் ரஜினியும் - நடிகர் கமலும் தவிர்க்கமுடியாதவர்கள். கடந்த 47 வருடங்களுக்கு முன்பு கே. பாலசந்தர் இயக்கிய 'தில்லு முல்லு'... மேலும் பார்க்க

Soodhu Kavvum: மீண்டும் திரையில் சூது கவ்வும்; மருமகன் படத்தை ரிலீஸ் செய்யும் மாமனார்!

2013-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்'. சேதுபதிக்கு பெரும் உயரத்தையும், அடையாளத்தையும், எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி... மேலும் பார்க்க