செய்திகள் :

Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; "நாகரிகத்திற்காக 'இதை' மட்டும் செய்யவில்லை" - ட்ரம்ப்

post image

ஈரானுக்கு மிக மிக முக்கியமானது, 'கார்க் தீவு'. இந்தத் தீவில் இருந்து தான் ஈரான் தன்னுடைய 90 சதவிகித எண்ணெய் ஏற்றுமதிகளைச் செய்கிறது.

90 சதவிகிதம் என்றால் ஒரு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 950 மில்லியன் பேரல்கள்.

இந்தத் தீவை அமெரிக்கா தொட்டால் ஈரான் கடுமையாக எதிர்வினையாற்றும் என்று இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அரசியல் பார்வையாளர்கள் எச்சரித்து வந்தனர்.

தற்போது அந்தத் தீவை தான் குறி வைத்து தாக்கியிருக்கிறது அமெரிக்கா.

இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே உறுதிசெய்துள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் பதிவு

இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...

"என்னுடைய வழிகாட்டுதலின் படி, ஈரானின் மகுடக் கல்லான 'கார்க் தீவில்' உள்ள அனைத்து ராணுவ தளவாடங்களும் தகர்க்கப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் ஆகும்.

நாகரிகம் காரணமாக, அந்தத் தீவில் இருக்கும் எண்ணெய் கட்டமைப்புகளை நாங்கள் தாக்கவில்லை.

ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பலின் பயணத்திற்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்பட்டால் எனது முடிவை மாற்ற வேண்டியதாக இருக்கும்".

இதற்கு ஈரானின் பதிலடி எப்படி இருக்குமோ?

https://truthsocial.com/@realDonaldTrump/116109447886304328

ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி

இந்தியாவை ரஷ்ய எண்ணெய் வாங்க அமெரிக்கா 'அனுமதி'த்தது குறித்து ஈரான் கேலி செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது என்று தான் இந்தியாவிற்கு கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது அமெரிக்கா. இந்திய... மேலும் பார்க்க

முதலில் தந்தை; இப்போது மகன்: மொஜ்தபா காமேனிக்கும் குறி வைக்கும் அமெரிக்கா - என்ன சொல்கிறது?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீதான போரை தொடங்கியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்.அந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் காமேனியை குறி வைத்தது இரு நாடுகளும். அவரும்‌ அந்தத் தாக்குதலில் உயிரிழ... மேலும் பார்க்க

எல்.பி.ஜி கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்த ஆட்டோ ஓட்டுனர்கள்! - திருச்சி நிலவரம்

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஹர்முஸ் நீர்வழிப்பாதையை மூடி உள்ளது. இதனால், உலகம் ... மேலும் பார்க்க