செய்திகள் :

KKR vs LSG: "எனது பேட்டிங் மூலம் பதில் சொல்லவே நான் விரும்புகிறேன்"- விமர்சனங்கள் குறித்து பண்ட்

post image

ஐபிஎல் தொடரின் நேற்றைய ( ஏப்ரல். 09) போட்டியில் லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின.

இதில் லக்னோ அணி, கொல்கத்தாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.

இந்நிலையில் அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், " இந்தப் போட்டியின் முடிவால் நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.

KKR vs LSG
KKR vs LSG

ஒரு வீரர் மீது கேப்டனும், அணி நிர்வாகமும் நம்பிக்கை வைக்கும் போது அது அந்த வீரருக்கு நம்பிக்கை தரும். அந்த விஷயத்தை நாங்கள் எங்கள் அணி வீரர்களுக்கு செய்கிறோம்.

ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒரு வீரர் பொறுப்பேற்று முன்னின்று செயல்படுவது, அணிக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வருகிறது.

குறிப்பாகத் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியைக் கட்டுப்படுத்தியது எங்களுக்குப் பெரிய சாதகமாக அமைந்தது.

ஷமி பாய்க்கு வயது கூடிக்கொண்டே போகிறது, ஆனால் அவரின் அனுபவம் அணிக்கு ஈடு இணையற்றது.

சில நேரங்களில் எல்லாப் போட்டிகளிலும் முடிவுகள் சாதகமாக அமையாது, ஆனாலும் அவர் போன்ற ஒருவர் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம்.

ஷமி பாய் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பந்துவீச்சு குழுவுமே ஒரு அற்புதமான வேலையைச் செய்திருக்கிறது" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

தொடர்ந்து அவரது பேட்டிங் பார்ம் குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலளித்த ரிஷப் பண்ட், " வெளியில் எழும் விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.

எனது பேட் மூலம் அவற்றுக்குப் பதில் சொல்லவே நான் விரும்புகிறேன். நான் எவ்வளவு கடினமாக உழைக்கிறேன் என்பது எனது சக வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் நன்றாகத் தெரியும்.

அதுவே எனக்குப் போதுமானது. நான் எப்போதுமே எனது பயிற்சியில் 200% ஈடுபாட்டுடன் இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

DC Vs GT: "கடைசியில் எங்களுக்கு அதுதான் பலன் அளித்தது.!" - வெற்றி குறித்து கேப்டன் சுப்மன் கில்

நேற்று (ஏப்ரல்.8) நடைபெற்ற குஜராத் vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி, கடைசி பந்து வரை சென்று விறுவிறுப்பான போட்டியாக மாறியது.கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பிரசித் கிருஷ... மேலும் பார்க்க

DC Vs GT: அந்த நேரத்தில் விக்கெட்டுகள் விழுந்தது தான் பின்னடைவு! – தோல்வி குறித்து அக்சர் படேல்

ஐபிஎல் 2026 தொடரின்நேற்றைய(ஏப்ரல் 8)விறுவிறுப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. கடைசி வரை த்ரில்லாகச் சென்ற இந்தப் போட்டியில், டெல்லி அணி இலக்கை எட்ட முடியாமல் நூ... மேலும் பார்க்க

DC vs GT: "ரொம்ப நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல விக்கெட்டை வீழ்த்திருக்கிறேன்" - ஆட்டநாயகன் ரஷித் கான்

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்.8) நடைபெற்ற டெல்லி vs குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய ரஷித் க... மேலும் பார்க்க

Sooryavanshi: `பயம்னா என்னனு தெரியல.!' - வைபவ்வின் ஆட்டத்தை வியந்து பாராட்டிய ஹர்திக் பாண்டியா!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு தருணம் அரங்கேறியது. உலகின் தலைசிறந்த பந்துவீ... மேலும் பார்க்க

'பங்காளியும் அடி வாங்குறான் மாப்ள...' - குஷியில் CSK ரசிகர்கள் - மும்பை சரிந்தது எப்படி?

கஷ்ட காலம் தனியா வராது, ஒன்றுக்குப் பின் ஒன்னாவும் வராது, ஒன்னோடு ஒன்னு ஒட்டிக்கிட்டு நம்மள ஒன்றுக்குமே இல்லாம ஆக்க வரும். இதுக்கு உதாரணம் கேட்டீங்கன்னா ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் தரப்பும் ராஜஸ்தான்... மேலும் பார்க்க

RR vs MI: "வைபவ் சூர்யவன்ஷிட்டருந்து புதிய ஷாட்களைக் கத்துக்கணும்" - ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால்

நடப்பு ஐ.பி.எல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.8) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் - ராஜஸ்தான் அணியும் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸை 27 ரன்களில் வீழ்த்திய ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக ரா... மேலும் பார்க்க