செய்திகள் :

Kuldeep: 'நண்பர்கள் படை; சஹாலின் நடனம்; ராயல் கல்யாணம்' - தோழியைக் கரம் பிடித்தார் குல்தீப்!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தனது நீண்டகால தோழியான வன்ஷிகா சிங்கை நேற்று (சனிக்கிழமை மார்ச் 14) கரம் பிடித்தார்.

இந்திய அணி அண்மையில் டி20 உலகக்கோப்பை 2026 தொடரை வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்த மகிழ்ச்சியில் இருந்த குல்தீப், தற்போது தனது புதிய வாழ்வைத் தொடங்கியுள்ளார்.

கான்பூரைச் சேர்ந்த குல்தீப் யாதவ் மற்றும் வன்ஷிகா ஆகிய இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். வன்ஷிகா எல்.ஐ.சி நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிகிறார்.

இவர்களின் திருமணம் கடந்த 2025 நவம்பர் மாதம் நடக்கவிருந்த நிலையில், குல்தீப் யாதவ்யின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் காரணமாக மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

 குல்தீப் யாதவ் மற்றும் வன்ஷிகா
குல்தீப் யாதவ் மற்றும் வன்ஷிகா

இந்த நிலையில், உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் குல்திப் சிங் - வன்ஷிகாவின் திருமணம் பிரமாண்டமான முறையில் நடந்தது.

முசோரியின் அழகிய மலைப்பகுதிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த ராயல் திருமணத்தில், குல்தீப் யாதவ்வின் நெருங்கிய நண்பரும் கிரிக்கெட் வீரருமான யுஸ்வேந்திர சஹால், ரின்கு சிங் மற்றும் பயிற்சியாளர் டி.திலீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஹல்தி மற்றும் மெஹந்தி சடங்குகளின்போது சஹால் உற்சாகமாக நடனமாடி திருமண வீட்டை அதிரவைத்தார்.

மணக்கோலத்தில் இந்த ஜோடியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, மார்ச் 17-ம் தேதி லக்னோவில் உள்ள ஹோட்டல் சென்ட்ரமில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

"அம்மா, நான் திரும்பி வருவேனானு தெரியாது!" - போர் பதற்றத்திற்கு இடையே 169 இந்தியர்களை மீட்ட விமானி!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தவித்த 169 இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வந்து சாதனை படைத்துள்ளார் 23 வயத... மேலும் பார்க்க

Rashmika Mandanna: `இப்படி உணர்ச்சிவசப்பட்டு ரொம்பநாள் ஆகுது' - ரஷ்மிகாவின் நெகிழ்ச்சிப் பதிவு!

சமீபத்தில் திரையுலக நட்சத்திரங்கள் திரும்பிப் பார்த்த நிகழ்வுகளில் ஒன்று நடிகர்கள் ரஷ்மிகா - விஜய்தேவரகொண்டா திருமணம். பிப்ரவரி 26 அன்று நடந்து முடிந்த திருமணத்துக்குப் பிறகு நடிகை ரஷ்மிகா தன் சமூக ஊட... மேலும் பார்க்க

USA : ``குவைத் தவறுதலாக 3 அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டது" - அமெரிக்கா!

இஸ்ரேலும் - அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி உள்ளிட்ட உயர் அதிகார்கள் உயிரிழந்தனர். அதற்குப் பழிவாங்கும் வகையில், ஈரான், குவைத், சவூதி அர... மேலும் பார்க்க

Shikhar Dhawan: `Almost the Dhawans' - திருமணம் குறித்து அறிவித்த ஷிகர் தவான்; மணமகள் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அயர்லாந்தில் பிறந்த சோபி ஷைன் (Sophie Shine) என்பவரைத் திருமணம் செய்யவிருக்கிறார்.மன உளைச்சலுக்கு ஆளான ஷிகர் தவான்2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு ... மேலும் பார்க்க

A.R.Rahman: ``ஒரே ஒரு ரீல்ஸ்ல ஆரம்பிச்சது..." - ஏ.ஆர்.ரஹ்மான் கான்சர்ட்டில் பாடியது குறித்து அலெக்ஸ்

சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில், A.R. ரஹ்மானின் "The Wonderment Tour" என்ற கான்சர்ட், பிப்ரவரி 14 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 40,000 பேர் வரை கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறத... மேலும் பார்க்க

Ilaiyaraaja: `137 படப் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை' - இளையராஜாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

இசைஞானி இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களை அவர் பயன்படுத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பிரபல இசை நிறுவனமான 'சரிகம' (Saregama) இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ... மேலும் பார்க்க