SIR Q&A : மக்கள் கேட்கும் முக்கிய சந்தேகங்களும் முழுமையான விளக்கமும் | Decode | ...
Love Deposit: உங்க லவ் டெபாசிட் நிரம்பி வழியுதா? காலியா இருக்கா? காமத்துக்கு மரியாதை - 266
நீ...ள... வேண்டிய ஒரு திருமண உறவு ஏன் திடீர்னு முற்றுப்புள்ளியை மீட் பண்ணிடுதுன்னு எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா..?
அப்படி நிகழாம தடுக்க என்ன செஞ்சிருக்கணும்னு யோசிச்சிருக்கீங்களா..? இதுவரைக்கும் யோசிக்காதவங்க, டாக்டர் காமராஜ் சொல்ற 'லவ் டெபாசிட்' செஞ்சு பாருங்க. திருமண வாழ்க்கை 70, 80-ல கூட சும்மா ஜம்முன்னு இருக்கும்.

''காதலிக்கிறப்போ எப்போ பார்த்தாலும் அவங்க கூடவே இருக்க மாட்டோம்; அவங்களோட குற்றம், குறைகளைச் சொல்லிக் காட்ட மாட்டோம், அவங்களுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்ய மாட்டோம், முக்கியமா நாகரீகமா நடந்துப்போம். இவையெல்லாம்தான் லவ் டெபாசிட். இவற்றையே முடிஞ்ச அளவுக்கு கல்யாணத்துக்குப் பின்னாடியும் ஃபாலோ பண்ணுங்க.
தவிர, கணவனோ மனைவியோ, உங்க பார்ட்னருக்குப் பிடிச்சதைச் சமைச்சுக்கொடுங்க; முடிஞ்சா அவங்க விரும்புற பொருளை வாங்கி கிஃப்ட்டா கொடுங்க; வீட்டு வேலைகள்ல பங்கெடுத்துக்கோங்க; கடைசியா, துணை அருவெறுப்பா ஃபீல் பண்ற விஷயங்களைச் செய்யாம இருங்க.

கணவனோ, மனைவியோ தன்னோட பிரச்னையைச் சொன்னாங்கன்னா, காது கொடுத்துக் கேட்கணும். பொதுவா ஒருத்தர் நம்மகிட்ட பேச ஆரம்பிச்சா, 18 விநாடிகளுக்குள்ள அதுக்கான மறுபேச்சை நாம பேச ஆரம்பிச்சிடுவோம். இது மனித இயல்பு. இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.
காது கொடுக்கிறது எவ்ளோ முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் அளவா பேசுறதும்... முக்கியமா வெறுமனே 'உம்' கொட்டாமல், காது கொடுத்துக் கேட்டு, முடிஞ்சா பிரச்னைக்குத் தீர்வும் சொல்லலாம்.
காதலிக்கிறப்போ முதல் அட்ராக்ஷன் அவுட் லுக் தான். அதுக்கப்புறம்தான் குணம், படிப்பு, பொருளாதாரம் எல்லாம்... அதனால, கணவனும் மனைவியும் அந்த 'லுக்'கை பராமரிக்கிறதுல முடிஞ்ச வரைக்கும் கவனம் செலுத்தணும். இவையெல்லாம் தான் லவ் டெபாசிட்.
கணவனும் மனைவியும் நான் மேலே சொன்ன மாதிரி நடந்துக்கிற விதம் தான், அவங்களோட காதல் பேலன்ஸ் தீர்ந்துபோயிடாம, காதலை டெபாசிட் செஞ்சுக்கிட்டே இருக்கும்.
வாழ்க்கைத்துணை கிட்ட ஆர்டர் போடுறது, சத்தம் போடுறது, கெட்ட வார்த்தை பேசுறது, இது கூடவா உனக்கு தெரியாதுன்னு மட்டம் தட்டுறது, நீ/நீங்க இப்படித்தான் இருக்கணும்; இப்படித்தான் நடந்துக்கணும்னு துணையை ஒழுங்குப்படுத்த முனையுறது... இந்த டைப் தம்பதியர் லவ் டெபாசிட்ல போடுற காதல் குறைவா இருக்கும்.
அதே நேரம் இழக்கிறது அதிகமா இருக்கும். இவையெல்லாம் நீங்க சேர்த்து வெச்சிருக்கிற லவ் டெபாசிட்டை காலி பண்ணிட்டே வரும். இதுல வாழ்க்கைத்துணையைத் திட்டுறதும் அடிக்கிறதும், லவ் டெபாசிட்டை மைனஸ்ல போக வெச்சிடும்.
ஸோ, பேங்க் பேலன்ஸை பராமரிக்கிற மாதிரியே காதலையும் நிறைய டெபாசிட் செய்யுங்க. லைஃப் நல்லா இருக்கும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.











