செய்திகள் :

LPG சிலிண்டர் தட்டுப்பாடு: `பொறுப்புள்ள அரசாக இதைச் செய்ய வேண்டும்!'- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

post image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் சிலிண்டரை பதுக்குவதை தடுக்க வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் அதிக அளவில் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர்
சிலிண்டர்

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக ரீதியான எல்பிஜி (LPG) சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகாவில் ஹோட்டல் துறை கடுமையாக பாதித்து இருக்கிறது. இதுபோன்ற நிலை தமிழ்நாட்டின் சிலப் பகுதிகளில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறும் வேல்முருகன்!' - கூடுதல் தொகுதி கிடைக்குமா? த.வா.க ப்ளான் என்ன?

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தனது கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறத் தொடங்கியிருக்கிறார். த.வா.க-வுக்கு ஒதுக்கும் 1 தொகுதியில் வேல்முருகனே களமிறங்குவார் எனச் சொல்லப்பட்ட சூழலில் 'த.... மேலும் பார்க்க

'உதயசூரிய'னில் நிற்க வற்புறுத்தும் திமுக - உயர்நிலைக் குழுவை அவசரமாக‌ கூட்டிய மதிமுக‌!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை, தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. இருக்குமா அல்லது வெளியேறி தவெக பக்கம் போகுமா என கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் விவா... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் கையிருப்பு நிலவரம்! எண்ணெய் நிறுவனங்கள் சொல்வது என்ன?

அமெரிக்க, இஸ்ரேல் படைகள் ஈரான் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலை ஆரம்பித்து ஒரு வாரம் கடந்து விட்டது.'அமெரிக்கப் படைகளுக்கு தளம் அமைக்க உதவுகின்றன' எனச் சொல்லி வளைகுடா நாடுகள் சி... மேலும் பார்க்க

'உதயசூரியன் சின்னம்' - மதிமுகவை நிர்பந்திக்கும் திமுக; டென்ஷனில் துரை வைகோ?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. ம.தி.மு.க - தி.மு.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ள நிலையில் அக்கட்சியின் முத... மேலும் பார்க்க

LPG: `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்' - சிலிண்டர் தட்டுப்பாடா? - மத்திய அரசின் திட்டம் என்ன?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்தியக் கிழக்கு நாடுகளில் போர் பரவியது. அதனால், உலக நாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற எண்ணெய், எரிபொருள் விற்பனை சிக்கலை சந்தித்தது. அ... மேலும் பார்க்க

'நமக்காக பேச யாருமில்லை' - விரக்தியடைந்த விசிக நிர்வாகிகள்; இழுபறியில் பேச்சுவார்த்தை?

வி.சி.க - தி.மு.க இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறவில்லை என்றும் வி.சி.க-வுக்காக குரல் கொடுக்க தி.மு.க கூட்டணியில் யாருமே இல்லை என விரக்தியடைந்து வருகிறார்கள் வி.சி.க மாநில நிர... மேலும் பார்க்க