செய்திகள் :

Madurai Rain: "எதற்காக நிவாரணம் தரணும்?" - மழை நிவாரணம் கோரிய சு. வெங்கடேசனுடன் மோதும் பி. மூர்த்தி!

post image

இலவச பட்டா வழங்குவது குறித்து ஏற்கனவே மதுரை மாவட்ட தி.மு.க.வினருக்கும் சி.பி.எம் கட்சியினருக்கு இடையே முட்டல் மோதல் ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் பெய்த மழை வெள்ள பாதிப்பு விவகாரத்திலும் மோதல் ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தின்போது

மதுரையில் சமீபத்தில் பெய்த கனமழையில் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் களத்தில் இறங்கிச் சீரமைப்பு பணிகளைச் செய்து வருகிறார்கள். அவர்களுடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் இணைந்து செயல்பட்டார்.

சு. வெங்கடேசன் வலியுறுத்தல்

இந்த நிலையில், "மதுரையில் பெய்த கடும் மழை வெள்ளத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பொருட்களை இழந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாகக் குறைந்தபட்சம் ரூபாய் 25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்..." என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளது மதுரை மாவட்ட தி.மு.க கூட்டணிக்குள் மீண்டும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பி.மூர்த்தி-சு.வெங்கடேசன்

இதே கோரிக்கையை ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் வைத்திருந்தார். ஆனால், அவருக்குப் பதில் சொல்லாத அமைச்சர் பி.மூர்த்தி, தற்போது சு. வெங்கடேசனின் கோரிக்கை குறித்து கோவமாகப் பேசியுள்ளார்.

பி. மூர்த்தி சொல்வதென்ன?

மதுரையில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பி. மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, "மதுரையில் பெய்த கனமழையினால் எந்தவொரு பாதிப்புகளும் ஏற்படவில்லை. தேங்கிய அனைத்து மழைநீரும் அகற்றப்பட்டுள்ளது. மதுரையில் எங்கே பாதிப்புகள் உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூற வேண்டும். எதற்காக நிவாரணம் கொடுக்க வேண்டும்?

அமைச்சர் மூர்த்தி

செல்லூர் கண்மாயிலிருந்து வைகை ஆற்றுக்குப் புதிதாக அமைக்கப்பட்ட வாய்க்கால் நிரந்தர வாய்க்காலாகக் கட்டுவதற்கு ரூ. 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் வாய்க்கால்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை வரும் முதல்வரிடம் ஆட்சியரும், ஆணையரும் மழை, வெள்ளப் பாதிப்புகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். மழைநீர் தேங்கிய பகுதிகளில் 107 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது" எனக் கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Tamil News Live Today: தொடங்கியது தவெக செயற்குழு கூட்டம்! நிறைவேற்றப்படும் 26 தீர்மானங்கள்?

முதல் மாநாட்டுக்குப் பிறகு நடைபெறும் செயற்குழு கூட்டம்!விஜய்தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27-ல் நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கொள்கைகளும், விஜய்யின் உரையும் கடந... மேலும் பார்க்க

Canada: அமித் ஷா மீது கனடா முன்வைத்த குற்றச்சாட்டு: கொதிக்கும் இந்திய அரசு! - என்ன நடக்கிறது?

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட குடியுரிமைப் பெற்ற சீக்கியர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின... மேலும் பார்க்க

`தம்பி என்பது வேறு; விஜய் ஒன்னு கொள்கையை மாத்தணும், இல்லைன்னா..!' - சீமான் விமர்சனம்

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடந்து முடிந்ததிலிருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் அரசியல் கொள்கை குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.அந்தவகையில், நாதக சார்பில் நேற்று ந... மேலும் பார்க்க

Prashant Kishor : `தேர்தல் ஆலோசனைக்கு நான் வாங்கும் கட்டணம்..' - வெளிப்படையாக பேசிய பிரசாந்த் கிஷோர்

பீகார் மாநிலத்தின் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர், தராரி ஆகிய நான்கு தொகுதிகளில் வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலுக்கான முடிவு 23-ம் தேதி வெளியாகும். எனவ... மேலும் பார்க்க

Iron Beam: 'அயர்ன் டோமின் அட்வான்ஸ்ட் வெர்சன்' - அறிமுகம் செய்ய உள்ள இஸ்ரேல்!

பாலஸ்தீனம், லெபனான், ஈரான்...என இஸ்ரேல் தற்போது போரிட்டு வரும் நாடுகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகின்றன. இத்தனை நாடுகளிடம் இஸ்ரேல் போரிட்டாலும் அது இன்னமும் பலமாக உள்ளது என்றால் அதற்கு அமெரிக்கா ஒரு... மேலும் பார்க்க

Tvk மாநாடு: ``விஜய் தன் அரசியல் எதிரியாக முன்னிறுத்தியது யாரை?" - விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

த.வெ.க முதல் மாநாட்டில் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் விஜய், "கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே எதிரியை அறிவித்துவிட்டேன். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம... மேலும் பார்க்க