Doctor Vikatan: ``குழந்தையின் அப்பா யார்?'' - DNA டெஸ்ட் உறுதிசெய்யுமா? எப்படி ச...
MASK: 'அரசன் அப்டேட், நெல்சன் - கவின் ரிலேஷன்ஷிப்’ - வெற்றிமாறன் பேச்சு!
கவின், ருஹானி சர்மா நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்கர்னன் இயக்கியுள்ள மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. வெற்றிமாறன் வழங்கும் இந்த படத்தை ஆண்ட்ரியா மற்றும் எஸ்.பி சொக்கலிங்கம் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் நடிகையாகவும் மிக முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார் ஆண்ட்ரியா.
ஆண்ட்ரியா புரொடியூஸ் பண்ற அளவு என்ன கதை?
மாஸ்க் குறித்து பேசிய வெற்றிமாறன், "மாஸ்க் பர்சனலா நான் புதுசா சில விஷயங்கள் கத்துக்கறதுக்கும் தெரிஞ்சுக்கறதுக்கும் ஹெல்ப் பண்ண ஒரு ஸ்கிரிப்ட். நான் விடுதலை ஃபர்ஸ்ட் பார்ட் முடிச்சிட்டு வெளிய போயிருந்தேன். அப்போ எனக்கு ஆண்ட்ரியா ஒரு ஸ்கிரிப்ட் ஒன்னு மெயில் அனுப்பிருந்தாங்க. 'இந்த ஸ்கிரிப்ட் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஐ வாண்ட் டூ ப்ரொடியூஸ் திஸ்' அப்படின்னு. ப்ரொடியூஸ் பண்ற அளவுக்கு என்ன ஸ்கிரிப்ட் இருக்கு பார்கலாம் அப்படின்னா, அந்த ஸ்கிரிப்ட்ல ஒரு நாலு அஞ்சு மொமெண்ட்ஸ் இருந்தது .ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான மொமென்ட்ஸ், கொஞ்சமும் எதிர்பார்க்காத மொமெண்ட்ஸ், சினிமாவுக்கு ரொம்ப அன்கன்வென்ஷனலான மொமெண்ட்ஸ் இருந்தது. அது என்னை எக்ஸைட் பண்ணுச்சு.

நான், 'இது நல்லா இருக்கு லெட் மீ கம் பேக் அண்ட் ஷேர் மை தாட்ஸ்வித் யூ'ன்னு சொன்னேன். சொக்கு ரொம்ப நாளாவே ஒரு படம் ப்ரொடியூஸ் பண்ணனும்னு நினைச்சிருந்தார். இப்ப நான் சொக்கு கிட்ட சொன்னேன் சொக்கு இந்த மாதிரி ஒரு ஸ்கிரிப்ட், ஆண்ட்ரியா சொன்னாங்க. நல்லா இருக்கு நீங்களும் சேர்ந்து ப்ரொடியூஸ் பண்றீங்களான்னு கேட்டேன். அவருக்கும் ஐடியா புடிச்சிருந்தது. 'சார் இது பண்றேன்னாரு. அங்கருந்துதான் இந்த படம் ஆரம்பிச்சது." என்றார்.
ஜிவி வேண்டாம்னு சொன்னாங்க...
மேலும் தொடர்ந்தவர், "கவினுக்கு ஸ்டார் ரிலீஸ் ஆகல. அதுக்கு முன்னாடியே நான் கால் பண்ணி ஐடியா சொன்னேன். அவருக்கும் அது பிடிச்சது. பிறகு டைரக்டரும் கவினும் மீட் பண்ணாங்க, ஸ்கிரிப்ட்ல சிலதெல்லாம் பண்ண முடியாத மாதிரி இருந்தது. அத மட்டும் கொஞ்சம் பில்டர் பண்ணலாம்னு சொல்லி விவாதிச்சோம். இயக்குநர் விக்கரனன்கிட்ட இதெல்லாம் காட்ட முடியும், சிலதெல்லாம் காட்ட முடியாதுன்ற மாதிரி பேசினேன். அவர் கிட்ட எனக்கு ரொம்ப புடிச்ச குவாலிட்டி என்னன்னா எந்தவிதமான பிரஷரையும் ரொம்ப கம்பர்டபிலா ஹேண்டில் பண்ண ஒரு ஆளு.
நேத்து பொல்லாதவன் ரிலீஸ் ஆகி 18 வருஷம் ஆகுது. கதிரேசன் சார்தான் வந்து பொல்லாதான் படத்தோட ப்ரொடியூசர். ஆறு ப்ரொடியூசர்ஸ் என்னையும் என்னுடைய கதைகளையும் வேணாம்னு சொன்னதுக்கு அப்புறம் ஏழாவதா என்னுடைய படத்தை ப்ரொடியூஸ் பண்ண ப்ரொடியூசர் கதிரேசன் சார், தேங்க்யூ சார். அப்புறம் தாணு சாரும் வந்திருக்காங்க தாணு சாருக்கும் தேங்க்ஸ் ஏன்னா ப்ரொடியூசர்ஸ் ரொம்ப தைரியமான ஆட்கள். என்ன மாதிரி ஒருத்தர வச்சு படம் எடுக்க நிறைய தைரியம் வேணும். அதுக்காக சொன்னேன்.
இந்த படத்தோட கிளைமாக்ஸ் ஷூட் பண்ணதும், நாங்க விடுதலை ஷூட் பண்ணதும் அதே இடம்தான். ஆர்.டி ராஜசேகர் சார் ரொம்ப நல்லா வொர்க் பண்ணிருந்தாங்க.
எனக்கு இந்த ஸ்கிரிப்ட் கேட்ட உடனே ஜிவி தான் பண்ணனும் தோனிச்சு. மத்த ப்ரொடியூசர்ஸ் ரெண்டு பேரும் ஜிவி வேணாம்ன்ற மாதிரிதான் இருந்தாங்க. ஏன்னா பெரிய கம்போசர் இந்த படத்துக்கு தேவையில்லை, இந்த கதைக்கு என்ன தேவையோ அதை ட்ரை பண்ணுவோம்னு சொன்னாங்க. நான் ஜிவி கிட்ட சொன்னேன் இந்த மாதிரி இருக்குனு, பிறகு இயக்குநர் போய் மீட் பண்ணி கதை சொன்னதுக்கு அப்புறம் ஜிவி உள்ள வந்தார். வந்த உடனே முதல் வேலையா நாங்க ஏற்கனவே ஒரு படத்துக்கு பண்ணி வச்சிருந்த சாங்ங்க, தாணு சார்கிட்ட கேட்டேன். தாணு சார் அந்த பாட்டை நான் யூஸ் பண்ணிக்கிறேன் சார்' அப்படின்னேன், 'அதுக்கு என்னப்பா நீ பண்ணு' அப்படின்னாரு. அதுக்கப்புறம் அந்த கண்ணமொழி சாங் வந்தது.
கவினுக்கு நெல்சன் அண்ணன்
எடிட்டர் ராமருக்கு உண்மையா மனசுல படுறத பேசுற தைரியம் இருக்கு. அது என்ன மாதிரி ஒரு ஆளுக்கு எப்பவுமே தேவை. எஸ்பெஷலி ஆன் தி எடிட் டேபிள் ஐ புஷ் மை செல்ப் ரியலி ஹார்ட், அப்போ வந்து 'போதும் நிறுத்துயா அவ்ளதான்யா இது' அப்படின்னு சொல்றதுக்கு எனக்கு ஒரு ஆள் வேணும். ராம் எப்பவுமே எதுவுமே யோசிக்கவே மாட்டாரு, 'இது இல்ல சார், இதுதான் சார்' அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு ஆளு. அந்த மாதிரி இன்னைக்கும் வந்து மனசுல பட்டத ரொம்ப நேர்மையாவும் உண்மையாவும் சொன்னதுக்கு அவருக்கு தேங்க்ஸ்.

ஆக்டர்ஸ் நிறைய பேர் நடிச்சிருக்கீங்க எல்லாருமே ரொம்ப ஸ்பெஷலா இருக்கு. பவனுடைய நடிப்பு ரொம்ப ஸ்பெஷலா இருந்தது. ஏன்னா அவர் நல்லா டான்ஸ் ஆடுவாருன்றது எனக்கு இந்த படம் நடக்கும்போதுதான் தெரியும். இதுக்கு முன்னாடி எனக்கு தெரியாது, நல்லா டான்ஸ் ஆடிருந்தாங்க சூப்பரா இருந்தது.
நெல்சன் இந்த படத்துல வாய்ஸ் ஓவர் பண்ணி இருக்காரு. நான் ரீசன்டா சினிமாவுல பார்த்த ஒரு நல்ல மனிதர் நெல்சன். சம்டைம்ஸ் போன் பண்ணா நாங்க ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம்லாம் பேசிட்டு இருக்கோம். மாஸ்க் எங்களுக்கு நிறைய பேசுறதுக்கான சான்ஸ் கொடுத்த ஒரு ஒரு படமா அமைஞ்சது. கவின் நெல்சனுடைய அசிஸ்டன்ட், அவருடைய தம்பி எல்லாமே.
நெல்சனுடைய பங்கு இந்த ஸ்கிரிப்ட்க்குள்ள இந்த படத்துக்குள்ள நிறைய இருக்கு. அவருடைய ஆலோசனைகள் நிறைய எடுத்துக்கிட்டு இருக்காங்க. அதுல வர்க் பண்ணி இருக்காங்க,
அரசன் அப்டேட்
ஆண்ட்ரியா இந்த படத்தின் மூலமா ப்ரொடியூசர் ஆகுறது எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் 'உங்களுக்கு எதுக்கு இந்த வேலை நீங்க ப்ரொடியூசரா என்ன பண்ண போறீங்க' அப்படின்னு கேட்டேன். அதுவும் 'இந்த ஸ்கிரிப்ட் எதுக்கு, உங்க கேரக்டர்ல கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் இருக்கே' அப்படின்னும் கேட்டேன். அவங்க, 'கொஞ்சம் எல்லாம் இல்லை. இது ப்ராப்பர் நெகட்டிவ் தான். அதனால என்ன இருக்கு.' அப்படின்னு சொன்னாங்க. அப்புறம் 'இது பண்ணா அப்புறம் இதே மாதிரி ரோல்ஸ் தானே கூப்பிடுவாங்க' அப்படின்னு கேட்டேன். அதுக்கு 'இப்ப மட்டும் எதுக்கு கூப்பிடுறாங்க, எதுக்கும் கூப்பிடுறது இல்ல. நானே ஒரு படம் ப்ரொடியூஸ் பண்றேன். இந்த கதை எனக்கு புடிச்சிருக்கு'ன்னு சொன்னாங்க.

இந்த படத்துக்காக நான் எம்.ஆர் ராதா சாருக்கு நன்றி சொல்லணும். இந்த படத்துல எம்.ஆர் ராதா ஒரு ரெவல்யூஷனரியா நிறைய விஷயங்களை கேள்வி கேட்டிருக்கார். ஒரிஜினலா விக்ரனன் ஐடியா நாலஞ்சு நடிகர்களுடைய மாஸ்க் இருக்குன்ற மாதிரிதான் இருந்தது. கடைசியில நான் ராதாரவி சார்கிட்ட படம் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி கேட்டேன். 'சார் இந்த மாதிரி யூஸ் பண்ண போறோம்'னு, 'எங்க ஐயாவ வந்து தப்பா காட்டுவீங்களா' அப்படின்னு கேட்டாரு. 'இல்ல சார் அப்படி எல்லாம் இல்ல சார்'னு சொன்னதும், ஓகே சொன்னாங்க.
எம்.ஆர் ராதா எதை அவருடைய கலையின் மூலமாக பேசினாரோ, அதுதான் இந்த கதை. இந்த படத்தினுடைய ஆன்மாவா இருக்கிறது. 'அடங்கு என்பார்கள், விலங்குகள் உடைத்து, தடைகளை தகர்த்து வென்று வா வெற்றி வீரனே' என்ற வரிகள்தான் இந்த படம்.
நவம்பர் 21 மாஸ்க் ரிலீஸ். நவம்பர் 24 அரசன் ஷூட் தொடங்குறோம்" என்றார்.













