Mrunal Thakur: "பச்சை நிறமே பச்சை நிறமே" - மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் போட்டோ ஆல...
Messi India Tour: மெஸ்ஸியுடன் மோத தயாராகும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த்; வைரலாகும் பயிற்சி வீடியோ!
தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு எதிராகப் போட்டியிடத் தயாராகும் வகையில், நாள்தோறும் கால்பந்து பயிற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Messi: G.O.A.T India Tour
ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள 'G.O.A.T. இந்தியா டூர் 2025' நிகழ்ச்சியின்போது மெஸ்ஸியுடன் முதல்வர் மோதவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த உலகக் கோப்பை சாம்பியன் மெஸ்ஸி, டிசம்பர் 13 முதல் 15 வரை கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் நடக்கும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார் என்கிறது மனோரமா செய்திதளம்.
CM Revanth Reddy practiced at the MCHRD grounds today as he gears up for the football match against Messi’s team on the 13th. https://t.co/YLWUqIgezjpic.twitter.com/uiONy9Wa1s
— Naveena (@TheNaveena) December 1, 2025
பிரபலங்கள் பங்கேற்கும் போட்டிகள் (Celebrity Matches) மற்றும் பல வேடிக்கையான பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும் மெஸ்ஸி கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தச் சுற்றுப்பயணத்தில் நான்காவது இந்திய நகரமாக ஹைதராபாத் இணைக்கப்பட்ட நிலையில், தங்கள் மாநிலம் மெஸ்ஸியை வரவேற்கத் தயாராக இருப்பதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.
இதுகுறித்த அவரது பதிவில், "டிசம்பர் 13 அன்று ஹைதராபாத்தில் 'G.O.A.T.' லியோனல் மெஸ்ஸியை வரவேற்று விருந்தளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்த ஜாம்பவானை நம் மண்ணில் காண வேண்டும் என்று கனவு கண்ட ஒவ்வொரு கால்பந்து ரசிகருக்கும், நம் நகரத்துக்கும் இதுவொரு அற்புதமான தருணம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், முதல்வர் ரேவந்த் ஹைதராபாத்தை மட்டும் தயார் செய்யவில்லை, அவரே போட்டிக்குத் தயாராகும் வகையில் பயிற்சி எடுத்து வருவதுதான் சுவாரஸ்யமான செய்தி.
கால்பந்து மைதானத்தில் போட்டிக்குப் பிறகு இளைஞர்களுடன் ரேவந்த் ரெட்டி இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சருக்கான தனது அலுவலக நேரத்திற்குப் பிறகு பயிற்சிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
போட்டியில் முதல்வர் ரேவந்த், தனது சட்டையில் 'எண் 9' (No 9) என்ற எண்ணை அணிவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இந்தப் போட்டியை 'M10 vs RR 9' (மெஸ்ஸி 10-க்கு எதிராக ரேவந்த் ரெட்டி 9) போர் என்று பரபரப்பாக்கி வருகின்றனர்.



















