செய்திகள் :

Mrunal Thakur: "சில படங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தாலும், 'வேண்டாம்'னு சொல்லிடுவேன்" - மிருணாள்

post image

'சீதா ராமம்’, 'ஹாய் நானா' படங்கள் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர்.

இந்தப் படங்களின் வெற்றி அடுத்தடுத்த படவாய்ப்புகளை உருவாக்கித் தர, பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவரது நடிப்பில் 'டகாய்ட்' திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர் தன்னுடைய படத்தேர்வு குறித்து பேசியிருக்கிறார்.

"பெரிய இயக்குநர்கள் என்னைத் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் தரும் ஆஃபர்கள் மிகவும் நன்றாக இருக்கும்.

ஆனால் சில படங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தாலும், கனத்த இதயத்துடன் நான் வேண்டாம் என்றே சொல்லி விடுவேன்.

மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்

'சீதா ராமம்' படத்தின் சீதா மகாலட்சுமி, ஹாய் நானாவின் 'யஷ்னா' ஆகிய கதாபாத்திரங்கள் என் திரைப்பயணத்தின் மைல்கற்கள்.

பேராசை பெரு நஷ்டம் என்பார்கள். அதனால்தான், வாய்ப்பு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எனக்கு ஏற்ற சரியான படத்தைத் தேர்வு செய்யவே விரும்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

"சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எழுதப்பட்ட படம் தான் 'TN 2026'.! " - தம்பி ராமையா

தமிழக அரசியலின் தற்போதைய சூழ்நிலையை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படமான 'TN 2026'. தம்பி ராமையாவின் மகனான டைரக்டர் உமாபதி இயக்கத்தில், நட்டி நடிப்பில் உருவான இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில்... மேலும் பார்க்க

தாரை தப்பட்டை: "என் வரிகளைக் கேட்டு பாலா சார் தேம்பி தேம்பி அழுதார்" - மோகன் ராஜன் | வரித்துணையே 15

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர... மேலும் பார்க்க

TN 2026: "அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டதுனு அவர் சொன்னார்" - நட்டி நடராஜ் பேட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் நட்டி நடராஜ் நடித்த 'டி.என். 2026 தங்க நட்சத்திரம்' என்ற படம் அரசியல் நையாண்டி படமாகக் கவனம் ஈர்த்திருக்கிறது. சமீபத்தில் வெளியான அதன் டீஸரில் விஜய்யின் கெட... மேலும் பார்க்க

"விஜய் சார் போன்ற தோற்றம் வருமிடங்கள்.!" - விஜய் பற்றி நடிகர் நட்டி

தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியிருக்கும் 'TN 2026' திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதாசிரியரும் தம்பி ராமையாதான்.நட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் ... மேலும் பார்க்க

"வில்லிவாக்கம் தொகுதிக்கு காலம் பதில் சொல்லுமா சார்?" - ரஜினிகாந்தின் ரியாக்ஷன் என்ன?

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷாருக்கான், மோகன்லால், சிவ ... மேலும் பார்க்க

"ஆதவ் அர்ஜூனாவை இந்தப் படம் சங்கடப்படுத்தாது!" - தம்பி ராமையா! | TN 2026

தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியிருக்கும் 'TN 2026' திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதாசிரியரும் தம்பி ராமையாதான்.நட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் ... மேலும் பார்க்க