செய்திகள் :

Nepal Flood : '84 தமிழர்களை காணவில்லை' - நேபாள வெள்ளம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

post image

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே நேபாள வெள்ளத்தில் சிக்கியிருக்கும் தமிழர்கள் பற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, '26.08.2026 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அங்கிருக்கும் தமிழர்களை மீட்கும்பணிகளில் இறங்கினோம். 27.08.2026 அன்று முதல்வருடன் அவசர ஆலோசனை நடத்திவிட்டு தமிழக அமைச்சர்கள் குழு டெல்லி சென்றது.

அங்கே மீட்புப் பணிக்கான உதவி மையங்களும் அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு டெல்லி இல்லத்தின் ஆணையர் ஆஷிஸ் மிஸ்ரா காத்மண்டுவுக்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியாக அனுப்பி வைக்கப்பட்டார். தமிழக அமைச்சர்கள் குழு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஷ்ரியை சந்தித்து மீட்புப் பணிகள் குறித்து ஆலோசித்தது. முதற்கட்டமாக 21 தமிழர்கள் நேபாளத்திலிருந்து மீட்டு வரப்பட்டனர். அவர்களுக்கான பயண செலவை அரசே ஏற்றது.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

305 தமிழர்கள் கைலாஷ் யாத்திரைக்கு சென்றது அறியப்பட்டது. அவர்களில் 220 பேர் பாதுகாப்பாக உள்ளனர். 84 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை. கும்பகோணம் நிறுவனம் மூலம் 57 பேர் நேபாளம் சென்றனர். அவர்களில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். குரோம்பேட்டை சேர்ந்த நிறுவனம் மூலம் 49 பேர் நேபாளம் சென்றிருந்தனர். இவர்களை தொடர்புகொள்ள தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேபாளம் சென்றவர்களின் உறவினர்கள் நேபாளம் செல்ல விரும்பினால் அரசே ஏற்பாடுகளை செய்துகொடுக்கும். மீட்புப் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.' என்றார்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க