செய்திகள் :

Nominee 'வாரிசு' அல்ல; வங்கிக் கணக்கு, முதலீடுகளில் நாமினியை கவனமாகத் தேர்வு செய்வது எப்படி?

post image

நாமினி - வங்கிச் சேமிப்புக் கணக்கு முதல் முதலீடுகள் வரை அனைத்திலும் கட்டாயம் கேட்கப்படும் ஒன்று.

'நாமினி' என்ற ஒன்றைப் பார்த்ததும், கண்ணை மூடிக்கொண்டு நாம் நிரப்பும் பெயர்கள் அம்மா, அப்பா, மனைவி, கணவன், மகள் அல்லது மகன்.

ஆனால், நாமினி விஷயத்தில் இப்படி 'டக்'கென முடிவு எடுத்துவிடக்கூடாது. அதில் மிக மிக கவனம் தேவை என்று கூறுகிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வரதன்.

"நாமினியாக யாரை நியமிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன், நாமினி என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.

இந்திய சட்டத்தின்படி, நாமினிக்கும், வாரிசுக்கும் வித்தியாசம் உண்டு.

விஷ்ணு வரதன்
விஷ்ணு வரதன்

நாமினி என்றால் நம் பணத்திற்கான 'Custodian' அதாவது காப்பாளர். நாம் நாமினியாக நியமிப்பவரின் பெயருக்கு பணம் போகும். அவர் அதை வாங்கி உங்கள் வாரிசிற்குக் கொண்டு சேர்க்கலாம்.

ஒருவேளை, அவரே வாரிசாக இருந்தால், அவர் அந்தப் பணம் குறித்த முடிவுகளை எடுக்கலாம்.

நாமினி என்பவர் பணத்தை வாரிசிடம் கொண்டு சேர்க்கும் கருவி. அவ்வளவு தான்.

அதனால், நாமினியாக யாரை நியமிக்கிறோம் என்பதில் கவனம் வேண்டும்.

பொதுவாக, இந்த வித்தியாசம் தெரியாமல், அம்மா, அப்பா, மகன், மகள் போன்றவர்களை நாமினியாக நியமித்துவிடுகிறோம்.

அவர்களுக்கு அந்தப் பணத்தை கிளைம் செய்யவோ, அதற்கான நடைமுறையோ தெரிகிறதா என்பது மிக மிக முக்கியம்.

அம்மா, அப்பா பெயரை நாமினியாக போடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு வயதாகி இருக்கலாம்... அதிகம் விவரம் தெரியாதவர்களாக இருக்கலாம்... வெளி உலகம் தெரியாதவர்களாகக்கூட இருக்கலாம்.

மகன், மகள்
மாதிரி படம்

மகன், மகளை எடுத்துக்கொண்டால், மகள் அல்லது மகன் பள்ளியில் படித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முதலீடு என்றால் என்ன என்று தெரியுமா என்பதே பெரிய கேள்வி.

அதனால், இந்திய சட்டத்தின் படி, 18 வயதிற்குக் கீழ் உள்ள நாமினிகளுக்கு, காப்பாளர்களை நியமித்துக் கொள்ளலாம்.

நாமினியாகவும், காப்பாளராகவும் யாரை போடுகிறோம் என்பதில் மிக மிக கவனம் தேவை.

உங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பத்திற்கும், வாரிசிற்கும் உங்களது பணத்தைக் கட்டாயம் எடுத்துச் செல்வாரா... உங்களுக்கு நம்பிக்கையானவரா... வங்கி, முதலீடு போன்ற நடைமுறைகளைத் தெரிந்தவரா என்பதைப் பாருங்கள்.

விவரம் தெரிந்தவர் என்று உங்களைவிட, வயதானவரை நாமினியாக போட்டு விடாதீர்கள். உங்களுக்குப் பின்னும் அவர் இருக்க வேண்டும்... பொறுப்பானவராக உங்கள் குடும்பத்திற்குப் பணம் எடுத்து செல்பவராக இருக்க வேண்டும் என்பதைப் பாருங்கள்.

நாமினி விஷயத்தில் பொதுவாக செய்யும் சில தவறுகள் உண்டு. அவை...

> ஏதேனும் ஒன்றிற்கு, உதாரணமாக, வங்கிச் சேமிப்புக் கணக்கில் நாமினியை நியமித்திருப்போம். அவரே எல்லா வங்கிக் கணக்கு, முதலீட்டுக் கணக்கிற்கும் நாமினியாகி விடுவார் என்று நினைப்பது தவறு.

ஒரே நாமினியாக இருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக நாமினியை அப்டேட் செய்ய மறந்துவிடாதீர்கள்.

திருமணம்
திருமணம்

> திருமணத்திற்கு முன், ஒருவரை நாமினியாக நியமித்திருப்போம். ஆனால், திருமணத்திற்குப் பின், இணையரின் பெயரை நாமினியாக மாற்ற வேண்டும் என்று நினைப்போம்... ஆனால், நினைத்துக்கொண்டே தான் இருப்போம்.

இதைக் கட்டாயம் செய்யத் தவறக்கூடாது. உடனே, நாமினியின் பெயரை மாற்றிவிடுவது நல்லது.

> ஓராண்டிற்கு ஒரு முறை நாமினியின் பெயர் மற்றும் அவரது ஆவணங்களைச் செக் செய்வது மிக அவசியம்.

நாமினி என்கிற கான்செப்டே - நமக்குப் பிறகு நம்முடைய பணம் நமக்கு நெருக்கமானவர்களுக்குப் பத்திரமாக சென்று சேர வேண்டும் என்பது தான்.

அதனால், அந்த நபருக்கு எப்படியாவது சென்று சேர்வதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

விவரம் தெரிந்தவர்களை நாமினியாக நியமிப்பது எவ்வளவோ முக்கியமோ... நாமினியிடம் விவரம் தெரிவிப்பதும் மிக முக்கியம்.

நாமினி
நாமினி

என்ன குழப்பமாக இருக்கிறதா? மேலே சொன்னதை மீண்டும் சொல்கிறேன்... நமக்குப் பிறகு இவருக்கு சென்று பணம் சேர வேண்டும் என்பது தான் நோக்கம்.

அதனால், எவற்றில் யாரை நாமினியாக நியமித்துள்ளீர்கள் என்பதை சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவியுங்கள். இல்லையென்றால், அவரை நாமினியாக நியமித்ததே வீணாகி போய்விடும்.

இன்னும் ஒரு படி மேலே போய், சிலவற்றில் நாமினிகளைப் போடுவதையே மறந்துவிடுவோம். அந்தத் தவறை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் செய்துவிடக் கூடாது. அதில் கவனம் தேவை".

11 நாளில் பணம் டபுளாகும்; மோசடி கும்பலிடம் 12 கோடி இழந்த டாக்டர்; அவசியம் அறிய வேண்டிய CAGR

யாரெல்லாம் அதிகப் பணம் சம்பாதிக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் பணம் செயல்படும் விதம் பற்றி ஓரளவுக்கே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை மீண்டும் மீண்டும் நிருபிக்கிற மாதிரி பல சம்பவங்கள் நடந்துகொண்... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உழைக்கப் போகிறீர்களா? உண்மையான செல்வத்தை உருவாக்கும் 6 ரகசியங்கள்!

பணக்காரராக இருப்பதற்கும், உண்மையான செல்வந்தராக (Wealthy) இருப்பதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. 'The Psychology of Money' புத்தகத்தின் ஆசிரியர் மார்கன் ஹௌசல் சொல்வது போல, "நீங்கள் செலவு செய்த பணம்... மேலும் பார்க்க

NRI Corner - 5: இந்த `3'-ம் இல்லாமல் எதில் முதலீடு செய்தும் எந்தப் பயனும் இல்லை... அந்த `3' என்ன?

சமீபத்தில் என்னைச் சந்திக்க 'லாபம்' அலுவலகத்திற்கு வந்திருந்தார் அஜ்மல். குவைத்தில் இருந்து ஒரு வார அவசரப் பயணத்தில் சென்னைக்கு வந்திருந்தவர், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு என்னை சந்திக்க வந... மேலும் பார்க்க

கிரெடிட் கார்டை பயன்படுத்தி கெத்தா, சூப்பரா, ஓஹோனு இருக்கணுமா? #CreditCard A-Z | பணம் வளர்ப்போம்

நாள் 5நேற்றைய அத்தியாயத்தில் எப்படி பாசிட்டிவ் மற்றும் பாதுகாப்பைப் பார்த்தோமோ... அது மாதிரி இன்று கிரெடிட் கார்டிற்கு இருக்கும் செக்குகளைப் பார்த்துவிடுவோம். கிரெடிட் கார்டு பற்றி நமக்கு விளக்குபவர் ... மேலும் பார்க்க

NRI-களே... ஊர் திரும்பியதும் உங்கள் மாதாந்திர பென்ஷனுக்கு என்ன கேரண்டி?!

வெளிநாடுகளில் குடும்பத்தைப் பிரிந்து, இரவு பகலாக உழைத்துச் சம்பாதிக்கிறீர்கள். இன்று கை நிறையச் சம்பளம் வரலாம். ஆனால், ரிட்டயர்மென்ட் முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பும்போது, ஒவ்வொரு மாதமும் குடும்பச்... மேலும் பார்க்க

'ஒரு லிட்டர் பெட்ரோல் 265 ரூபாய்' - அதிரவைக்கும் புள்ளிவிவரம்! - எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?

''அவனுக்கென்னப்பா, கோடீஸ்வரன். எந்தக் கவலையும் இல்லாம ஜாலியா இருக்கான்'' என்று சில நண்பர்களைப் பற்றி சிலர் கொஞ்சம் பொறாமையுடன் பேசுவதைக் கேட்டு இருப்பீர்கள். கோடீஸ்வரன் என்பது இன்றைக்கு ஒரு கெத்து ஃபீ... மேலும் பார்க்க