திருப்பத்தூர்: பெண் உட்பட இருவர் வெட்டிக்கொலை - பட்டப்பகலில் நடந்தேறிய கொடூரம்!
OM: "மும்பையில் மெடிக்கல் இண்டர்ஷிப்; அதனால்தான்..." - ஶ்ரீலீலா
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'ஓ.ம்' திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலாவும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக டோலிவுட் பக்கம் பெரியளவில் கவனம் செலுத்தாமல் இருந்தார் ஸ்ரீலீலா. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் புரோமோஷன் நிகழ்வில் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார் ஸ்ரீலீலா.
அவர், "மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பையில் எனது மருத்துவப் பயிற்சியை மேற்கொண்டு வந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
நான் அங்கு நேரடியாகத் தங்கியிருந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருந்ததால், புதிய படங்களை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

அந்தச் சமயத்தில் நான் ஒப்பந்தமான படம்தான் இந்த 'ஓ.ம்'. சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கான படங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. வந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு அப்படியே பயணித்தேன்" எனப் பகிர்ந்திருக்கிறார்.
ஸ்ரீலீலா தற்போது ரஜினிகாந்தின் 'தர்மன்', அஜித்தின் 'டேர் டெவில்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதைத் தாண்டி சில இந்திப் படங்களையும் லைன்-அப்பில் வைத்திருக்கிறார்.



















