செய்திகள் :

Operation Toofan-காக கேரளத்தில் ஒன்றிணையும் விஜய், மோகன்லால்; கேரள முதல்வரின் திட்டம் என்ன?

post image

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கேரள அரசு ஆப்பரேஷன் தூஃபான் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பையும் நாடிவருகிறது கேரள அரசு. அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா நேற்று சென்னையில் சந்தித்தார்.

அதுகுறித்து ரமேஷ் சென்னிதலா தனது முகநூலில் பகிர்ந்துள்ள பதிவில், "போதைப்பொருள் மாஃபியாவிற்குக் கடுமையான அதிர்ச்சியை அளிக்கும் வகையில் 'ஆபரேஷன் தூஃபான்' தீவிரமாக முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுடன் இரு மாநிலங்களின் போதைப்பொருள் எதிர்ப்புப் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

நமது 'ஆபரேஷன் தூஃபான்' திட்டத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார். ​இரு மாநிலங்களும் இணைந்து செயல்படும் என்றும், ரகசியத் தகவல் பரிமாற்றம் மற்றும் எல்லைப் பகுதி ரோந்துப் பணிகளைக் கூட்டாகக் கையாள்வது என்றும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

போதைப்பொருளின் வேர்களை அறுத்தெறிய இனி நம்மோடு தமிழ்நாடு அரசும் இருக்கும். கேரளாவின் பரிசாக, தகழியின் "கயர்" (கயிறு) என்ற புகழ்பெற்ற காவியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. மற்றொரு மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்து கொள்கிறேன், நமது இந்த வரலாற்றுப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் விரைவில் கேரளாவிற்கு வருவதாகத் தெரிவித்துள்ளார். ​

'ஆபரேஷன் தூஃபான்' திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக கேரளாவிற்கு வருகை தரும் அவரை இருகரம் கூப்பி அன்போடு வரவேற்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

ரமேஷ் சென்னிதலா, முதல்வர் விஜய்
ரமேஷ் சென்னிதலா, முதல்வர் விஜய்

மேலும், கேரளா திரும்பிய ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் அரை மணி நேரத்துக்கும் மேல் சந்திப்பு நடந்தது. ஆபரேஷன் தூஃபானுக்கு அவர் முழு ஆதரவைத் தெரிவித்தார். பின்னர் உயர் அதிகாரிகளுடன் இது குறித்த ஆலோசனை நடைபெற்றது.

கேரளா தமிழ்நாடு எல்லைகளை முழுமையாக காவல்துறை கண்காணிப்பில் கொண்டு வரவும், பரஸ்பரம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் அதில் தீர்மானிக்கப்பட்டது. போதைப்பொருளுக்கு எதிராக மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.

கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, தமிழக முதல்வர் விஜய்
கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, தமிழக முதல்வர் விஜய்

கேரளாவில் ஆபரேஷன் தூஃபான் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் மோகன்லால் உள்ளார். போதைப்பொருளுக்கு எதிராக கைகோர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் நான் கேரளத்திற்கு அழைத்துள்ளேன். மோகன்லாலும் விஜய்யும் ஜில்லா என்ற சினிமாவில் சேர்ந்து நடித்துள்ளார்கள். எனவே, மோகன்லாலும் விஜய்யும் கலந்துகொள்ளும் வகையில் போதைப்பொருளுக்கு எதிராக எர்ணாகுளத்தில் அடுத்தமாதம் ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவுசெய்துள்ளோம்.

போதைப்பொருள் எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் பங்கெடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நம்முடன் கைகோர்ப்பதாகக் கூறியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழ்நாடு போலீஸும் கேரளா போலீஸும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு போதைப்பொருளுக்கு எதிதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

Dark web-ல் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவுகள் கசிவு; பாதுகாப்பிற்கு என்னென்ன அச்சுறுத்தல்கள்?

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது கூடங்குளம் அணுமின் நிலையம். இது ரஷ்ய நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்ட அணுமின் நிலையம் ஆகும். இங்கே தற்போது தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இ... மேலும் பார்க்க

கட்சி தாவ தயாராகும் தேனிக்காரர் டு `அய்யாவை சந்திக்க முடியவில்லை' பா.ம.க சர்ச்சை! | கழுகார்

பா.ம.க-வில் வெடிக்கும் சர்ச்சை!"அய்யாவை சந்திக்க முடியவில்லை..."பா.ம.க-வில் தந்தையும் மகனும் இணைந்துவிட்ட நிலையில், 'ஜி.கே.மணி, சேலம் அருள் உள்ளிட்ட ஒரு சிலரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதில்லை'... மேலும் பார்க்க

கோவை தவெக-வில் உட்கட்சி மோதல்; சாலையில் மோதிக்கொண்ட இரு தரப்பினரால் பரபரப்பு!

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றஉறுப்பினர் சுகுமார் நேற்றிரவு கணியூர் பகுதியில், தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு வாகனத்தில் சென்றபடி நன்றி தெரிவித்தார். அப்போது அங்கு திரண்... மேலும் பார்க்க

"என் ​உடலை ஜூம் செய்து போட்டோ எடுத்து வலைதளத்தில் பகிர்ந்தனர்"- கேரள பெண் அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

கேரள மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா டெல்லியில் நடைபெற்ற கேரள பத்திரிகையாளர் சங்கத்தின் 'மைக் டுகெதர்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அமைச்சர் பிந்து கிருஷ்ணா ... மேலும் பார்க்க

பழனி கோயில் நில முறைகேடு: "ஊழலுக்குப் பின்னாலுள்ள அந்த Powercenter யார்?" - முதல்வருக்கு EPS கேள்வி

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது..."பழனி அருள்... மேலும் பார்க்க

"Iran போரை நீட்டிக்க அமெரிக்க மக்களிடம் 'இதை' செய்கிறது இஸ்ரேல்"- அமெரிக்க துணை அதிபர் குற்றச்சாட்டு

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின், மீண்டும் ஈரான் போர் தொடங்கியதற்கு மிக முக்கிய காரணம் - இஸ்ரேல். இஸ்ரேல், லெபனான் மீது தாக்குதல் நடத்தியதால்தான், ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியது.... அதன்... மேலும் பார்க்க