Gold Rate: நேற்று அதிரடி ஏற்றம்; இன்று அதிரடி குறைவு - இன்றைய தங்கம் விலை நிலவரம...
OPS: "அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் நீண்ட அறிக்கை வெளியிடுவேன்" - ஓபிஎஸ் விளக்கம்
தேனி செல்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
அவரை முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வரவேற்றார். தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

"வைத்தியலிங்கம் தி.மு.க-வில் இணைந்தது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். தமிழ்நாடு வரும் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை. தி.மு.க-வில் இணைவீர்களா என்று கேட்கிறீர்கள். அதுபற்றி உங்களை அழைத்து கூறுவேன்.
பொறுமையாக இருங்கள். தொடர்ந்து என்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் நீண்ட அறிக்கை வெளியிடுவேன்" என்றார்.
பின்னர், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து வெல்லமண்டி நடராஜனும் காரில் ஏறி புறப்பட்டார்.
















