செய்திகள் :

Orry Income: ஒரு ரீல்ஸில் ரூ.76 லட்சம் சம்பாதித்த இன்ஃப்ளூயன்சர்! பார்ட்டிக்கு போனால் ரூ.25 லட்சம்?

post image

இன்ஸ்டாகிராமில் பாலிவுட் பிரபலங்களுடன் தொடர்ந்து காணப்படுபவர் ஓரி (Orry). இவருக்கு என்று எந்தவொரு குறிப்பிட்ட வேலையோ அல்லது தொழிலோ கிடையாது. எனினும், ஒரு பிராண்டின் விளம்பரத்திற்காக இன்ஸ்டாகிராமில் வெறும் ஒரு ரீல் வீடியோ வெளியிட்டதன் மூலம் தனக்கு ரூ.76 லட்சம் வருமானம் கிடைத்ததாக அவர் சமீபத்தில் தெரிவித்தது இணையத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 'Learn by KK Create' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியிலேயே அவர் இது குறித்துப் பேசியுள்ளார்.

Orry
Orry

ஓரியின் முழுப் பெயர் ஓர்ஹான் அவத்ரமணி (Orhan Awatramani). இவர் முன்னணி சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சராக உள்ளார். பாலிவுட் நட்சத்திரங்களின் பார்ட்டிகள், அம்பானி வீட்டுத் திருமணங்கள், வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் என எங்கு பார்த்தாலும் பிரபலங்களுடன் இருப்பார். பிரபலங்களுடன் நெருக்கமாக இருப்பதும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதும் தான் இவருடைய முழுநேரப் பணியாகவே மாறிவிட்டது.

பிராண்டுகளுடனான விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாகவே தனக்கு பெரும் வருமானம் வருவதாக ஓரி குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் ஒரு நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ஒரே ஒரு ரீல் பதிவு செய்ததற்கு, அவருக்கு ரூ.76 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இது இன்றைய இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங்கின் விஸ்வரூபத்தை காட்டுகிறது.

சமூக வலைதள விளம்பரங்களை விட, நேரில் சென்று கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மூலமே தனக்கு அதிக வருமானம் வருவதாக ஓரி கூறுகிறார். பொதுமக்களோ அல்லது தொழிலதிபர்களோ அவரைத் தங்களின் வீட்டுத் திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், மதிய அல்லது இரவு விருந்துகளில் கலந்துகொள்ள அழைக்கலாம்.

Orry
Orry

இப்படி ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவருக்கு 15 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை (சில சமயங்களில் 30 லட்சம் வரை) வாடிக்கையாளர்கள் கட்டணமாக வழங்குகிறார்கள். நிகழ்ச்சியில் ஒரு சாதாரண விருந்தினராக இல்லாமல், நீண்ட கால நண்பர் போல கலந்துகொண்டு, குடும்பத்தினருடன் பேசிப் பழகி, ஜோக் அடித்து, நடனமாடி, புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதை ஒரு 'தொழிலாகவே' அவர் செய்கிறார். "இது நீங்கள் காசு கொடுத்து வாங்கக்கூடிய ஒரு ஸ்பெஷலான அனுபவம்" என அவர் இதை வர்ணிக்கிறார்.

பிரபலங்களுடன் நின்று புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பதில் தனக்கென ஒரு பிரத்யேகமான ஸ்டைலை ஓரி வைத்துள்ளார். இது இணையத்தில் மிகவும் பிரபலம். "இந்தியாவில் ஷாருக் கான் மற்றும் ஓரி ஆகிய இருவரின் போஸ்கள் மட்டுமே மிகவும் பிரபலம். அந்த உச்சத்தை நான் அடைந்ததில் எனக்கு மிகவும் பெருமை" என அவர் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

ஒரே ரீலில் பல லட்சங்களும், நிகழ்ச்சிகள் மூலம் கோடிகளும் சம்பாதித்தாலும், தனது பணத்தை இன்னும் தனது அப்பா மற்றும் அம்மாவே நிர்வகித்து வருவதாக கூறியுள்ளார். "பணத்தை நானே நிர்வகிக்கும் அளவுக்கு நான் எப்போதுமே மாறப் போவதில்லை" என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Orry
Orry

ஒரு காலத்தில் புகழ் என்பது வெறும் கவனத்தையும் ரசிகர்களையும் மட்டுமே ஈர்த்து வந்த நிலையில், இன்று அந்தப் புகழையே ஒரு பெரும் வியாபாரமாக மாற்ற முடியும் என்பதற்கு ஓரி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எந்தவொரு பாரம்பரியமான வேலையும் இல்லாமல், தனது தனித்துவமான பிம்பத்தையும் (Personal Branding), சமூக வலைதளத் தாக்கத்தையும் வைத்து ஒருவரால் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்பது இன்றைய 'டிஜிட்டல் கிரியேட்டர்' உலகின் ஆச்சர்யப்பட வைக்கும் ஓர் உண்மை.

ஓரி கூறியுள்ள வருமான எண்கள் அதிகாரபூர்வமாகத் தணிக்கை செய்யப்படவில்லை என்றாலும், அவர் அப்படிப் பேட்டியளித்ததும், அதற்காக மக்கள் அவருக்குப் பணம் கொடுக்கத் தயாராக இருப்பதும் முற்றிலும் நிஜமே!

‘எனக்கு என்ன பிடிக்கும்னு யோசித்ததே இல்லை!’ - தாய்லாந்தில் தன்னைத் தேடிய இந்திய பெண்ணின் கதை

ஒரு பெண்ணின் உலகம் எதுவரை? வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடும் பொறுப்புகள்தானா அல்லது கண்டங்கள் கடந்து விரியும் எல்லையற்ற வானமா? இந்தக் கேள்விக்குத் தன் ஒற்றை நாள் பயணத்தின் மூலம் பதில் சொல்லி... மேலும் பார்க்க

கோர்ட்டில் விவாகரத்து ஆவணங்களைக் கிழித்துவிட்டு கட்டிப்பிடித்த தம்பதி; வைரல் படத்தின் பின்னணி என்ன?

டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி பல ஆண்டுகளாக விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு அலைந்து கொண்டிருந்தனர். ஷிகா என்ற அப்பெண் செளரப் என்பவரை 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களில் க... மேலும் பார்க்க

பீகார்: 17 வயது சிறுவனை திருமணம் செய்த 22 வயது பெண்; பஞ்சாயத்திற்கு வந்த விவகாரம்; என்ன நடந்தது?

பீகார் மாநிலம் மதுபுரா மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் வசிப்பவர் பூஜாகுமாரி(22). இவருக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் பித்து குமார்(17) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் வீட்டிற்க... மேலும் பார்க்க

செயற்கை கருத்தரிப்பு மைய குளறுபடியால் மாறிய கரு? "பிறந்தது எங்கள் குழந்தைகள் அல்ல" - தம்பதி புகார்

டெல்லி அருகில் உள்ள குருகிராமைச் சேர்ந்த தம்பதியான ராகுல் மற்றும் மீனு தம்பதி செயற்கை முறையில் (Vitro Fertilisation) குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக டெல்லியில் உள்ள டாக்டர் கைலாஷ் கருத்... மேலும் பார்க்க

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க