செய்திகள் :

PBKS Vs RR: "நாங்கள் அதில்தான் கோட்டை விட்டுவிட்டோம்" - முதல் தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்

post image

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல். 29) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காத பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் முறையாகத் தோல்வியைச் சந்தித்தது.

PBKS Vs RR Match
PBKS Vs RR Match

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எனது பாராட்டுகள்.

அவர்கள் களமிறங்கிய விதமும், பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிய விதமும் அற்புதமாக இருந்தது.

நாங்கள் பந்துவீச்சில்தான் கோட்டை விட்டுவிட்டோம் என்று நினைக்கிறேன். நிறைய ஸ்லோவர் பால்கள், யோர்க்கர்கள் போடத் திட்டமிட்டோம், ஆனால் அதைச் சரியாகச் செய்யவில்லை.

டி20 கிரிக்கெட்டில் நிறைய வீரர்கள் தங்களது ஆட்டத்தை மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டுகிறார்கள். எனவே, ஒரு குறிப்பிட்ட திட்டத்துடன் வருவது பந்துவீச்சாளர்களுக்குக் கடினமான காரியமாக இருக்கிறது.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

ஆனால் சரியான திட்டத்தை வகுத்து, அதைச் சரியாகச் செயல்படுத்தினால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும். நாங்கள் இதுவரை பின்பற்றி வந்த வழக்கமான முறைகளையும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்வோம்.

இந்தச் சீசனில் எங்களது முதல் தோல்வி, எனவே இது நிறைய பாடங்களைக் கற்றுத் தரும்" என்று பேசியிருக்கிறார்.

IPL 2026: "உன்னால் முடியாது என்று என்னிடம் யாராவது சொன்னால்..." - விமர்சனங்கள் பற்றி ஸ்ரேயாஸ்

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். களத்தில் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் Jio Hotstar-க்கு பேட்டி அளித்த... மேலும் பார்க்க

IPL 2026: ஜவ்வு மிட்டாய் போல இழுக்கும் போட்டிகள்; பிசிசிஐ-க்கு கவாஸ்கர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கோரிக்கை வைத்திருக்கிறார்.ஐபிஎல் 2026 சீசன் விறுவி... மேலும் பார்க்க

LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் (ஏப்ரல் 26) லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட விறுவிறுப்... மேலும் பார்க்க

'கடைசி வரை நம்பிக்கையை விடவில்லை'- சூப்பர் ஓவர் வெற்றி குறித்து ரஹானே!

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 26) பரபரப்பான ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்த... மேலும் பார்க்க

CSK vs GT: "கணிக்க முடியாத பிட்ச், மந்தமான ஃபீல்டிங்" - தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருதுராஜ்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி சென்னை ரசிகர்களுக்குப் பெரும்... மேலும் பார்க்க

LSG vs KKR: "தோல்விக்கு எல்லா வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும்" - லக்னோ கேப்டன் பண்ட் வேதனை

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையிலான போட்டி சமனில் முடிந்தது. இறுதியில் நடைபெற்ற 'சூப்பர் ஓவர்' மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வ... மேலும் பார்க்க