செய்திகள் :

Pocso சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க ‘சிங்கப்பெண் விழிப்புணர்வு’ முகாம்! - உயர் நீதிமன்ற உத்தரவு

post image

திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை போக்சோ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்ககுளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பலரும் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி விக்டோரியா கெளரி பிறப்பித்த உத்தரவில், " சில போக்சோ வழக்குகளில் சொந்த பகையை தீர்க்க பொய்யாக பாலியல் புகாராக அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. 

போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க மாநிலம் முழுவதும்  ‘சிங்கப்பெண் விழிப்புணர்வு’ பயிலரங்குகளை நடத்த தமிழக உள்துறை செயலாளர், சமூக நலத்துறை இயக்குநர் மற்றும் சட்டத்துறைச் செயலாளர் ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்சோ சட்டத்தை கையாளுவதில் மென்மைப் போக்கு, குழந்தைகளின் உளவியல், தண்டனை ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது குழந்தைகளைப் பாதுகாக்கும் புனிதமான சட்டம். ஆனால் பெரியவர்களின் பழிவாங்கல்களுக்காகத் பயன்படுத்தப்படும் போது, உண்மையில் பாதிக்கப்படும் குழந்தைக்கு நீதி தள்ளிப்போகிறது.

போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு

குழந்தைப் பருவம் என்பது மிகவும் மென்மையானது. நீதிமன்றமும் காவல்துறையும் இயந்திரத்தனமாகச் செயல்படாமல், பரிவோடும், அரவணைப்போடும் நடக்க வேண்டும்.  போக்சோ சட்டத்தின் வெற்றி என்பது தண்டனையில் இல்லை. நீதி அமைப்பிலிருந்து வெளியே வரும் குழந்தை எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறது என்பதில்தான் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

நெல்லை: ஆட்சியர் அலுவலகம் அருகே தாமிரபரணி கரையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் | Photo Album

திருநெல்வேலி: ஆட்சியர் அலுவலகம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள்.!நெல்லை மாவட்டம், சொக்கம்பட்டி சுயம்பூற்றுநாதர் கோயில் : மனச்சுமைகள் குறையும்... உற்சாகம் பிறக்கும்! மேலும் பார்க்க

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள் எல்லைக்குள் வராது' என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இந்த வசனத்தை திரைப்படங்களில்கூட கேட்டிருப்போம். சாதாரண மக்களுக்கு எங்கே நடந்த ... மேலும் பார்க்க

'அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம்' - அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் பிரதமர்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே இறுதி செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகப்... மேலும் பார்க்க

`சாதி மறுப்புத் திருமணங்களும், தொடரும் ஆணவக் கொலைகளும்!' - கர்நாடகாவைப் பின்பற்றுமா தமிழ்நாடு?

சாதியும் - திருமணமும்அண்ணல் அம்பேத்கர், 'சாதி மறுப்புச் சிந்தனை' (Annihilation of Caste) என்ற தனது நூலில், ``சொந்தச் சாதிக்குள்ளேயே திருமணம் முடித்துக்கொள்ளும் அமைப்புதான், இன்றளவும் 'சாதி' தப்பிப் பி... மேலும் பார்க்க

`மேட்டூர் அணை வரலாற்றில் ஏற்பட்டுள்ள 62-வது ஆண்டு காலதாமதம் இது!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

காவிரி ஆற்றுப்படுகை பாசனத்தின் அடிப்படை ஆதாரமாகப் பங்காற்றி வருகிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரால் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி எ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் திட்ட வீடியோ சர்ச்சை: அமைச்சர் ராஜ் மோகன் சொல்லும் விளக்கம் என்ன?| Live Updates

லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்ற அமைச்சர் வன்னி அரசு!வன்னி அரசுசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் வன்னி அரசு. சிம்பொனி இசையமைத்து சாதனை நிகழ்த்திய இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்றார். அப்போது,``தமிழ... மேலும் பார்க்க