TVK: "NDA கூட்டணிக் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் எண்ணம் இல்லை" - சி.டி.ஆர். நிர...
PTR, சுந்தர்.சி-யை வீழ்த்திய விஜய்யின் தளபதி; மதுரையில் இரண்டாவது வெற்றியை பெற்ற தவெக
மதுரை மாவட்டத்தில் ஸ்டார் தொகுதியாக பார்க்கபடும் மதுரை மத்தி தொகுதியில் திமுக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அதிமுக வேட்பாளர் சுந்தர்.சி இருவரையும் பின்னுக்கு தள்ளி தவெக வேட்பாளர் பதுருதீன் (எ) முஸ்தபா வெற்றி பெற்றார்.
திமுகவின் குறிப்பிடதக்க அமைச்சரான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி சார்பில் இயக்குநர் சுந்தர். சி போட்டியிட்டார். இருவரும் மக்களுக்கு பரிட்சையமான முகம் என்பதால் மதுரை மத்தி தொகுதியில் இருவருக்கு மட்டுமே போட்டி என பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது இருவரையும் ஓரம்கட்டி விட்டி தவெக வேட்பாளர் முஸ்தபா வெற்றி பெற்றிருப்பது அதிமுக, திமுக கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே தவெகவின் கை ஓங்கியே இருந்ததும் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் 2000 அதிகமான வாக்குகளையே பெற்று வந்தார். முஸ்தபா. மதுரை மத்தி நகர் பகுதி என்பதோடு தொகுதியில் ஏரளமானவர்களுக்கு இன்னமும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கபடமாலேயே இருக்கிறது. இந்த காரணங்களால் இந்தத் தொகுதியை சேர்ந்த மக்கள் தவெகவிற்கு வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது.





















