Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
Rain Alert : ஃபெஞ்சல் புயல் எதிரொலி; சென்னையில் விமான நிலையம், திரையரங்குகள் மூடல்!
சென்னையில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையிலும், நாகையிலிருந்து வடகிழக்கு திசையில் 210 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது ஃபெஞ்சல் புயல்.
இது மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி - மகாபலிபுரத்திற்கு இடையே மாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. புயலின் காரணமாக விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், இந்த மாவட்டங்களில் 21 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் புயல் காரணமாக கனமழை பெய்யும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நவ.30) திரையரங்குகள் இயங்காது என திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. அதேபோல புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று (நவ.30) நகைக் கடைகள் இயங்காது என்றும் - சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் அறிவித்திருக்கிறது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சென்னை விமான நிலையமும் மூடப்பட்டிருக்கிறது. ECR, OMR பகுதிகளில் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டிருக்கிறது.