செய்திகள் :

Rain Alert: ``கடலுக்கு செல்ல வேண்டாம்; 48 மணி நேரத்தில் புயலாக வலுபெறும்'' - வானிலை ஆய்வு மையம்

post image

சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகியிருக்கிறது.

ஆனால் சென்னையில் மழை குறைவாக பதிவாகி உள்ளது.

மழை
மழை

இந்திய கடல் பகுதியில் 3 சுழற்சிகள் ஒன்றாகக் காணப்படுகின்றன. அந்தமான், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் சுழற்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.

மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெறும்.

டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, நெல்லையில் நாளை கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மழை
மழை

நவம்பர் 25, 26 ஆம் தேதி சூறவாளிக்காற்று 35 - 45 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் அதி கனமழை பதிவாகி உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

Rain Upadate: 'இன்று இடியுடன் கூடிய கனமழை' - எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை அருகே, தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயலின் எச்சம் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியதால் கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வ... மேலும் பார்க்க

சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று `ஆரஞ்சு அலர்ட்'?

சென்னையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே நிலை தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களுக்கும் பொருந்தும். தற்போது சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

Ditwah: அடுத்த 24 மணிநேரத்தில் டிட்வாவின் நிலை என்ன?- சென்னைக்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த டிட்வா புயலின் எச்சமான காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து... தற்போது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்பகுதி அருகே நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறியுள்... மேலும் பார்க்க

சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு `ஆரஞ்சு' அலர்ட்!

தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை... மேலும் பார்க்க

Rain Alert: கனமழை முன்னெச்சரிக்கை – 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம... மேலும் பார்க்க