New World Order உருவாகிறதா? Canada PM Mark Carney கொடுத்த எச்சரிக்கை! | Davos | ...
Rain Update: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியிருக்கிறது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோரம் மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் அண்ணாநகர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, பட்டினம்பக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு (ஜன.24) முதலே மிதமான மழை பெய்துவருகிறது.
மழைத் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல நாளை( ஜன.26) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.
















