Anaswara Rajan: "அல்லு அர்ஜுனை மலையாள நடிகர் என நினைத்துக் கொண்டிருந்தேன்" - அனஸ...
Rashmika: "அப்போது அவர் உடைந்து போய் அழுதுகொண்டிருந்தார்" - ராஷ்மிகா குறித்து ராகுல் ரவீந்திரன்
இயக்குநர் மற்றும் நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், ராஷ்மிகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'தி கேர்ள்ஃப்ரெண்ட்'.
ஆணாதிக்க சிந்தனை நிறைந்த உலகத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்ணின் போராட்டங்களை அப்படம் பேசுகிறது. பார்வையாளர்களிடம் அப்படம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பு இயக்குநர்களின் ரவுண்ட்டேபிள் நேர்காணலை நடத்தியிருந்தது.
அதில் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் 'தி கேர்ள்ஃப்ரெண்ட்' படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான காட்சியைப் படம்பிடித்த விதம் குறித்து எடுத்துரைத்திருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் அவர், "இந்தப் படத்தில் மிகக் கடினமான காட்சி என்றால் கதவு காட்சிதான். ராஷ்மிகாவுக்கும் எனக்கும் அந்தக் காட்சி மிகவும் உருக்கமானதாக இருந்தது.
அக்காட்சிதான் படத்தின் விதை. என் சொந்த வாழ்க்கையிலும் நான் பார்த்த ஒன்று அது. இந்த ஒரு காட்சிக்காக நான் ராஷ்மிகாவிடம், ‘நீங்கள் பூமாவைப் போல யோசிக்க வேண்டும் என்று கேட்கப்போவதில்லை. இக்காட்சியில் ராஷ்மிகாவைப் போல யோசிக்கச் சொல்கிறேன்’ என்று சொன்னேன்.

உங்களைப் பலர் துன்புறுத்திய ஒவ்வொரு முறையையும் நினைத்துப் பார்க்கச் சொன்னேன். அத்தனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அதை உள்ளிருந்து நடிக்கச் சொன்னேன்.
அந்தக் காட்சி முடிந்ததும் மிகவும் உடைந்து போய் கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 20 நிமிடங்கள் அழுதுகொண்டிருந்தார்.
நான் அப்படி நடிக்கச் சொன்னதால் அவருக்குள் ஆழமாகப் புதைத்து வைத்திருந்த ஏதோ ஒன்று வெளியே வந்தது. அது அவர் பல ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த ஒன்று” எனக் கூறியிருக்கிறார்.



















