செய்திகள் :

'Really I am Proud be a Director!' - ஹீரோ ஆசையில் இருந்து இயக்குநராக மாறிய பாரதிராஜாவின் பகிர்வு

post image

"தொடக்கத்துல நடிகனாகத்தான் முயற்சி பண்ணேன். ஒரு சீனுக்கு ரெண்டு சீனுக்கு கூப்பிடுவாங்க. ‘டாக்டரா வர்றியா’னு கூப்பிடுவாங்க. ‘என்னடா இது ஹீரோவாகணும்னு வந்தா, சூழல் இந்த மாதிரி இருக்கே’னு ஒரே குழப்பம்" - சென்னைக்கு 'ஹீரோ' ஆசையுடன் தான் வந்திருக்கிறார், பாரதிராஜா.

ஆனால், அவருக்கு கிடைத்த அங்கீகாரம், 'இயக்குநர்' என்பதாகும்.

மக்கள் மனதில் 'இயக்குநர் இமயம்' ஆக நிறைந்திருக்கும் பாரதிராஜா, "ஒரு பெட்ரோல் பங்க்ல வேலை செஞ்சுக்கிட்டே வாய்ப்பு தேடிட்டிருந்தேன்.

பாரதிராஜா
பாரதிராஜா

அப்போ, பெட்ரோல் போட வரும் காருக்குள்ள ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரினு, ஃபுல் மேக்அப்ல மெழுகு பொம்மையாட்டம் உட்காந்திருப்பாங்க" என்று விகடனின் 'தடம்' இதழுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

"ஒரு கட்டத்துக்கு மேல, சினிமா இந்த முகத்தை ஹீரோவா ஒத்துக்கிறது கஷ்டம்னு தெரிஞ்சது.

சரி, எப்படியாவது சினிமாவுக்குள்ள போகணும்னு உதவி இயக்குநரா நுழைஞ்சேன். அது ஒருவிதமான நிர்பந்தம்.

இப்போ நினைச்சுப் பார்க்கும்போது, ஆச்சர்யமா இருக்கு. Really I am Proud be a Director!" என்று 2008-ல் தன் நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார் 'பாசத்திற்குரிய பாரதிராஜா'.

"ஒயின் ஷாப்களின் எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக்க வேண்டும்!" - கஞ்சா கருப்பு சர்ச்சை பேச்சு

நடிகர் ரவி மரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மக்கள் தலைவா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, க... மேலும் பார்க்க

Jayaram: "அப்போ நான் அவர்கிட்ட போய் மன்னிப்புக் கேட்டேன்'' - தன் காதல் கதையைப் பகிர்ந்த ஜெயராம்

நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த வாரம் 'பரிமளா & கோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அப்படத்திற்காக நம் சினிமா விகடன் சேனல் நடத்திய பிரத்யேக 'விகடன் பிரஸ் மீட்' நிகழ்வில் ஜெயராம் கலந்துகொண்டு ... மேலும் பார்க்க

Nooru Saami: "பசியோட இருக்காத, பண உதவி பண்றேன்னு..." - ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Nooru Saami: "'உன்னை பார்க்கும்போது ரவுடி மாதிரி தெரிஞ்ச'னு சசி சார் சொன்னார்!" - பா. ரஞ்சித்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் - வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்... மேலும் பார்க்க

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்க... மேலும் பார்க்க