செய்திகள் :

RSS, R&AW-ஐ தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை; 'முதலில் அமெரிக்கவைப் பாருங்கள்' - மத்திய அரசு

post image

அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் சமீபத்தில் 2025-ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டது.

அதில் இந்தியாவில் மத சுதந்திர அத்துமீறல்கள் நடக்கின்றன என்றும், இதனால் இந்தியாவின் R&AW மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், இந்தியாவை, 'கவலைக்குரிய நாடு' பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது.

ரந்தீர் ஜெய்ஸ்வால்
ரந்தீர் ஜெய்ஸ்வால்
இந்த அறிக்கைக்குப் பதில் அளித்துள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்...

"அமெரிக்காவின் USCIRF-ன் அறிக்கையை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்தியாவை உள்நோக்கத்துடனும், பாரபட்சத்துடனும் சித்தரிப்பதை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.

பல ஆண்டுகளாக, கேள்விக்குரிய ஆதாரங்கள் மற்றும் கருத்தியலை வைத்து USCIRF இந்தியாவை ஒருதலைப்பட்சமாகவும், தவறாகவும் சித்தரித்து வருகிறது.

இப்படித் தொடர்ந்து தவறாகச் சித்தரிப்பது அந்த ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்குறி ஆக்குகிறது.

இந்தியாவை இப்படி விமர்சிப்பதற்குப் பதிலாக, இந்த ஆணையம் அமெரிக்காவில் உள்ள இந்து கோயில்கள் மீது நடக்கும் தாக்குதல்களில் கவனம் செலுத்தலாம்.

மேலும், இந்தியப் புலம்பெயர்ந்தோர் மீது அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் அச்சுறுத்தல்களில் தீவிர கவனம் செலுத்தலாம்" என்று கூறியுள்ளார்.

நெல்லை: காட்டுச் சாலையில் எரிந்து கிடந்த கார் - கருகிக் கிடந்த 4 உடல்களால் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைக்குளம் - ஆற்றங்கரை பள்ளிவாசல் சாலையில் கார் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது... மேலும் பார்க்க

``எனக்கு `அந்த' நடிகை வேண்டும் எனக் கேட்டால்.!" - சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து சி.வி ... மேலும் பார்க்க

`தாமரை மலர்ந்துவிட்டது… உங்கள் தயவு எங்களுக்கு தேவையில்லை!’ – முதல்வர் ரங்கசாமியை ஓரம் கட்டும் பாஜக

`லாட்டரி சார்லஸ் மார்ட்டின் வேண்டாம்’புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச... மேலும் பார்க்க

`இரவுக்குள் ஒரு முடிவு; அதிக தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால்.!' - அறிவாலயத்தில் பெ.சண்முகம் கறார்!

திமுக - சி.பி.எம் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடிக்கும் நிலையில், இன்று அறிவாலயத்தில் இருதரப்புக்கும் இடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருந்தது. திமுகவின் தொகுதிப் பங்கீடு ... மேலும் பார்க்க

Vijay : 'என்ன ஆனாலும் தனியாதான் போறோம்!' - விஜய்யின் கட்டளையும் வியூகப்புள்ளியின் லாஜிக்கும்!

தவெக - என்.டி.ஏவுடன் கூட்டணி பேசுவதாக செய்தி வெளியாகி அரசியல் வட்டாரமே பரபரப்பானது. இந்நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட விஜய், 'என்ன ஆனாலும் தனியாதான் போறோம்.... மேலும் பார்க்க

"தமிழகத்தின் தொன்மைக்குக் கிடைத்த வெற்றி" - 11ம் கட்ட கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி உள்ளிட்ட எட்டு முக்கியமான இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய தொல்லியல் ஆய்வு மையம் ... மேலும் பார்க்க