செய்திகள் :

Rukmini: "யாரும் ஷேர் பண்ணாதீங்க" - பகிரப்படும் AI புகைப்படங்கள்; நடிகை ருக்மிணி வசந்த் புகார்

post image

தன்னுடைய புகைப்படங்களை AI உதவியுடன் சித்திரித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக நடிகை ருக்மிணி வசந்த் புகார் அளித்திருக்கிறார்.

மேலும், டீப்ஃபேக் உதவியுடன் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் முற்றிலும் சித்திரிக்கப்பட்டவை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ருக்மிணி வசந்த்
ருக்மிணி வசந்த்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், "என்னுடைய படங்கள் என்று கூறி சமூக வலைத்தளங்களில் AI உதவியுடன் சில புகைப்படங்கள் பகிரப்படுவதை நான் கண்டறிந்தேன்.

அந்தப் படங்கள் முற்றிலும் போலியானவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இதுபோன்று படங்களை உருவாக்குவதும், சித்தரிப்பதும் தனியுரிமையை மீறும் செயலாகும். இவ்விவகாரத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக அணுகி வருகிறோம்.

இந்தப் படங்களை உருவாக்கியவர்கள் மற்றும் பரப்புபவர்கள் மீது தேவையான சட்டப்பூர்வ மற்றும் சைபர் கிரைம் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.

ருக்மிணி வசந்த்
ருக்மிணி வசந்த்

இதுபோன்று உருவாக்கப்படும் புகைப்படங்களைப் பகிர்வதையோ அல்லது பரப்புவதையோ அனைவரும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

"தூக்கம் வராத நேரங்கள்ல எல்லாம் நான் ஒரு ஹாரர் படம் பார்ப்பேன்!" - பவன் கல்யாண் ஜாலி டாக்

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், தெங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான பவன் கல்யாண், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனக்குத் தூக்கம் வராத இரவுகளில் மனதை அமைதிப்படுத்த அவர் கையாளும் பழக்கம் குறித... மேலும் பார்க்க

"நடிகைகள் தங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்" - 'பெத்தி' விவகாரம் குறித்து நித்யா மேனன்

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பெத்தி'. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் ப... மேலும் பார்க்க

"சினிமாவில் பெண்களைக் காட்டும் விதம் கொடூரமானதாக இருக்கிறது" - 'பெத்தி' பட விவகாரம் குறித்து கங்கனா

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பெத்தி'. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் ப... மேலும் பார்க்க

Maa Inti Bangaaram: "சாய் பல்லவியை மனதில் வைத்துதான் இந்தக் கதை உருவாக்கப்பட்டது!' - பகிரும் சமந்தா

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'க... மேலும் பார்க்க

'பெத்தி' படத்தில் ஜான்வி கபூர் கதாபாத்திரம்: - பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் புச்சி பாபு சனா!

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பெத்தி. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் பு... மேலும் பார்க்க

Peddi Review: அடையாளத்துக்காகக் களமிறங்கும் விளையாட்டு வீரன் - படமாகக் கோப்பையை வென்றதா?

அரசாங்க ஏடுகளில் எந்தவித பெயர் கொண்டும் அச்சேறாமல் இருக்கும் தன்னுடைய மலைக் கிராமத்துக்கும், அதன் காரணமாக அடையாளமற்று, அடிப்படை வசதிகளற்றுக் கிடக்கிற தன் கிராம மக்களுக்கும் தன் விளையாட்டுத் திறமையால் ... மேலும் பார்க்க