செய்திகள் :

Russian Oil: 'எங்கள் வணிகம் உலக சந்தைக்கு முக்கியம்' - பாசிட்டிவ் ரஷ்யா; சைலண்ட் மோட் இந்தியா

post image

"ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா கூறிவிட்டது. அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க உறுதியளித்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி"

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் மற்றும் வரிக் குறைப்பு பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதிவு.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைக்க உள்ளதா என்பது குறித்து இன்னமும் இந்தியா எதுவும் சொல்லவில்லை.

ட்ரம்ப் பதிவு வெளியிட்ட அன்றே, 'எங்களிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா எங்களிடம் எதுவும் கூறவில்லை' என்று எதிர்வினையாற்றி இருந்தது ரஷ்யா.

டிமிட்ரி பெஸ்கோவ்
டிமிட்ரி பெஸ்கோவ்

அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியா ஒத்துக்கொண்டதாக ட்ரம்ப் கூறியது குறித்து ரஷ்யாவின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசியபோது,

"இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருள்களை ரஷ்யா மட்டும் சப்ளை செய்வதில்லை என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.

இந்தியா எப்போதுமே இந்தப் பொருள்களைப் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

அதனால், இது ஒன்றும் புதிதாக எங்களுக்குத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

இந்தியா - ரஷ்யா எண்ணெய் வர்த்தகம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மரியா ஜகரோவா பேசியபோது,

"ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா வாங்குவது இரு நாடுகளுக்கு உதவுவதாகவும், உலக எரிசக்தி சந்தையின் நிலைத்தன்மைக்கு இது உதவுவதாகவும் இருக்கிறது என்று ரஷ்யா கருதுகிறது.

இந்தத் துறையில் இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதைத் தொடர ரஷ்யா தயாராக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில், 'என்ன நிலைப்பாடு?' என்பதை இனி இந்தியாதான் வாயைத் திறந்து சொல்ல வேண்டும்.

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொ... மேலும் பார்க்க