செய்திகள் :

Salman Khan: பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாள் விழா; தோனி, இந்தி நடிகர்களுடன் கொண்டாடிய சல்மான் கான்!

post image

நடிகர் சல்மான் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து இந்தப் பிறந்தநாளை சல்மான் கான் மும்பை புறநகர் பகுதியில் உள்ள பன்வெலில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் கொண்டாடினார்.

பிறந்தநாள் விழாவிற்காக நேற்று மாலையிலிருந்து பாலிவுட் நண்பர்கள் சல்மான் கான் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து இந்தப் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். இந்தப் பிறந்தநாளில் சல்மான் கானின் பெற்றோர், சகோதரர், சகோதரிகள் என அனைத்து உறவினர்களும் கலந்து கொண்டனர்.

நடிகர் சந்தீப் ஹோடா, சஞ்சய் தத், ஆதித்ய ராய் கபூர், ரகுல் பிரீத் சிங், தபு, ஹூமா குரேஷி, மகேஷ் மஞ்சிரேகர், தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி, ரமேஷ் தொரானி உட்பட சல்மான் கானின் பாலிவுட் நண்பர்கள் இந்தப் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். நடிகை ஜெனிலியா தேஷ்முக் தனது இரண்டு மகன்களுடன் இந்தப் பிறந்தநாளில் கலந்து கொண்டார்.

பாரதி துபேயுடன் சல்மான் கான்
பாரதி துபேயுடன் சல்மான் கான்

சல்மான் கானின் முன்னாள் காதலி சங்கீதா பிஜ்லானி, மிகா சிங் உட்பட பலர் நள்ளிரவு வரை வந்து கொண்டே இருந்தனர். இரவில் தொடங்கிய பிறந்தநாள் பார்ட்டி அதிகாலை வரை நீடித்தது. சல்மான் கான் பண்ணை வீட்டிற்கு வெளியில் ஏராளமான சினிமா புகைப்படக் கலைஞர்கள் கூடியிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் சல்மான் கான் தனது பண்ணை வீட்டிலிருந்து வெளியில் வந்தார்.

அவர் கேக் ஒன்றை எடுத்து வந்து பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். கேக் வெட்டி அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களுக்கு சல்மான் கான் வழங்கினார். அதோடு அவர்களுடன் சேர்ந்து சல்மான் கான் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

மூத்த பெண் பத்திரிகையாளர் பாரதி துபே இதில் கலந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் சல்மான் கான் அவரைக் கட்டித்தழுவி அவரது நெற்றியில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சல்மான் கான் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்ற மாபியாவால் அச்சுறுத்தல் இருப்பதால் பண்ணை வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சல்மான் கானின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகள் சமூக வலைத்தளத்தில் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

இன்று மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு வெளியில் கூடும் ரசிகர்களின் வாழ்த்துகளை சல்மான் கான் ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது.

Sikandar: "முதலில் கதை சுவாரஸ்யமானதாக இருந்தது; ஆனால், பிறகு நடந்தவை.!" - ராஷ்மிகா மந்தனா

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு 'மதராஸி', 'சிக்கந்தர்' என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மதராஸி' படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாலிவுட் படமான 'சிக்... மேலும் பார்க்க

``அதிகாரத்தில் இருப்பவர்கள் மௌனம் காப்பதும் கவலையளிக்கிறது" - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி ஆதரவு

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்துப் பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாகப் பேசிய... மேலும் பார்க்க

``ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல" - தஸ்லிமா நஸ்ரீன்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்து பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாக பேசியிர... மேலும் பார்க்க

"என் மகள் கட்டாயப்படுத்தினார்" - முன்னாள் மனைவி, பிள்ளைகளோடு மராத்தானில் பங்கேற்ற ஆமீர் கான்!

மும்பையில் நேற்று டாடா மராத்தான் போட்டி நடந்தது. இதையடுத்து தென்மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இப்போட்டியில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தடகள வீரர்கள், வீராங்கனைகள... மேலும் பார்க்க

டான் 3 படத்தில் நடிக்க ஷாருக் கான் விதிக்கும் புதிய நிபந்தனை: பர்ஹான் அக்தர் சம்மதிப்பாரா?

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இதற்கு முன்பு நடித்த டான் படம் பெரிய அளவில் ஹிட்டானது. டான் 2 படமும் வெளிவந்துவிட்டது. இப்போது டான் 3 படத்தை இயக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் ம... மேலும் பார்க்க

'5 ஏக்கர் ரூ.37.9 கோடி' - கோலியின் முதலீடு; அலிபாக் நகரில் பாலிவுட் நடிகர்கள் குவியக் காரணம் என்ன?

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.மும்பையில் வசித்து வந்த விராட் கோலி தம்பதி இப்போது இங்கிலாந்தில் கு... மேலும் பார்க்க