வேலூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி - கிராமத்தையே உலுக்கிய துயரம்
Sanchar Saathi: சைபர் செக்யூரிட்டி செயலியுடன் ஸ்மார்ட்போன் தயாரிக்க மத்திய அரசு உத்தரவு
நாட்டில் டிஜிட்டல் கைது மற்றும் இணைய குற்றங்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மோசடியில் பெரும்பாலும் பெண்கள், முதியோர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இக்குற்றங்களை தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பெரிய அளவில் பயனளிக்கவில்லை.
சி.பி.ஐ அதிகாரிகள், போலீஸார், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி இணைய கும்பல் பணம் பறித்து வருகிறது. இதையடுத்து ஸ்மார்ட் போன்களில் சைபர் செக்யூரிட்டி செயலியான Sanchar Saathi கட்டாயம் இடம் பெறவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இனிமேல் தயாரிக்கப்படும் ஸ்மார்ட் போன்களில் கட்டாயம் சைபர் செக்யூரிட்டி செயலிகள் இடம் பெறவேண்டும் என்று மத்திய அரசு ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை வரும் 90 நாள்களுக்குள் அமல்படுத்தவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Sanchar Saathi செயலியை மத்திய அரசு தயாரித்து இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலி மூலம் காணாமல் போன அல்லது திருடப்பட்ட 7 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் மட்டும் 50 ஆயிரம் போன்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 50 லட்சம் பேர் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சைபர் செக்யூரிட்டி செயலியை தங்களது கம்பெனி போனை தயாரிக்கும்போதே சேர்த்து தயாரிக்க சாம்சங், விவோ போன்ற பெரும்பாலான கம்பெனிகள் ஒப்புக்கொண்டுள்ளன.

ஆனால் ஆப்பிள் போன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தங்களது கம்பெனி தயாரிக்கும் செயலிகளை மொபைல் போனில் பதிவேற்றம் செய்து வெளியிடுகிறது.
ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட் போன்களில் புதிய சைபர் செக்யூரிட்டி செயலியை சாப்ட்வேரை அப்டேட் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் மத்திய அரசு தங்களிடம் கேட்காமல் இது போன்ற செயலிகளை தயாரித்து மொபைல் போனில் பதிவேற்றம் செய்ய சொல்வதாக மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் இந்த செயலி சந்தேகத்திற்கு இடமான அழைப்புகள் குறித்து உஷார்படுத்துவதோடு, IMEI நம்பர்களையும் சரிபார்க்கும். உலகில் மிகப்பெரிய மொபைல் போன் சந்தையாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் 1.2 பில்லியன் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

















