செய்திகள் :

Sanitary Workers : கொளத்தூரில் முதல்வரை எதிர்த்து தூய்மைப் பணியாளரை போட்டியிட செய்வோம்! - கு.பாரதி

post image

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் அம்பத்தூரில் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தனர்.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி பேசுகையில், 'காவல்துறையினுடைய அடக்குமுறையை கடந்து 116 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். 4 பெண்கள் 6 நாட்களாக காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர்.

அரசு சார்பில் எந்த பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை.

ஆனால், இன்றைக்கு 4, 8 மண்டலங்களை 4000 கோடிக்கு தனியாருக்கு விட ஒப்பந்தம் கோரியிருக்கிறார்கள். அதுவும் கடைசி தேதி முடிந்த பிறகும், ஒரு நாள் தேதியை தள்ளிவைத்து ஒப்பந்தம் கோரியிருக்கிறார்கள். ஆட்சி முடிவதற்குள் மொத்தமாக கொள்ளையடிக்க நினைக்கிறார்கள். மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தனியார் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக செயல்பட்டுகிறார். அவருடைய துணைவியாருக்கு பல ஒப்பந்தங்களை ஒதுக்கியிருக்கிறார்.

கு.பாரதி
கு.பாரதி

200 வார்டுகளுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறை, ஓய்வறை கட்டித் தருவதாக முதல்வர் கூறுகிறார். நான்கரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இப்போதுதான் கழிவறை இல்லை என்பது தெரிகிறதா?

முதல்வர் கார்த்திகேயன், முருகானந்தம், குமரகுருபரன் போன்ற ஐ.ஏ.எஸ்ஸின் பேச்சுகளை ஏன் கேட்க வேண்டும்? மாநகராட்சியில் ககன்தீப் சிங்கும் ராதாகிருஷ்ணனும் இருந்தவரை தனியார்மயம் வரவில்லையே. குமரகுருபரன் இருக்கும் போது மட்டும் எப்படி?

உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் ராம்கி நிறுவனத்துக்கும் தொடர்பு இருக்கிறதோ என்கிற சந்தேகம் இருக்கிறது.

4 பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இருக்கிறார்கள். அவர்களின் உயிருக்கு சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும்தான் பொறப்பு.

கு.பாரதி
கு.பாரதி

குமரகுருபரன் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தோடு இயங்குகிறார். அவருக்கு எப்படி ஸ்பெசல் பவர் கிடைக்கிறது. அவருடைய மனைவிக்கு ஒப்பந்தம் கொடுக்கும் அதிகாரம் எப்படி வந்தது?

எளிய மக்கள் தங்களின் உரிமைகளை கேட்டால் தூக்கி எறிந்து விட்டு செல்லலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் வாக்கு கேட்டு வரும் போது நாங்களும் தெருவில் இறங்குவோம். சேப்பாக்கம், கொளத்தூர் தொகுதிகளில் உங்களுக்கு எதிராக தூய்மைப் பணியாளர்களை போட்டியிட செய்வோம்.

அடுத்தக்கட்டமாக வருகிற திங்கட் கிழமை அரசிடம் வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்கவிருக்கிறோம்.' என்றார்.

”கோவை, மதுரை மெட்ரோ திட்ட விவகாரம்; யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை!”- அப்பாவு

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு. அப்போது பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா குறித்து எவ்வ... மேலும் பார்க்க

`திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிறதா?’ முந்தி அறிவித்த ப.சி; `திடீர்’ குழு அமைப்பின் பின்னணி!

2021-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தி.மு.க, கா... மேலும் பார்க்க

சேலம் திமுக நிர்வாகி கொலை: ``ரூ. 5000-க்கு துப்பாக்கிகள் கிடைக்கின்றன" - அன்புமணி குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளரும், விவசாயியுமான ராஜேந்திரன் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ... மேலும் பார்க்க

`வேட்புமனு வாபஸ் அச்சம்’ - கூட்டணியில் இருந்தும் வேட்பாளர்களை ஹோட்டலில் தங்கவைத்த பாஜக, சிவசேனா

மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, மனுவை வாபஸ் பெறும் நாள் நேற்றோடு முடிந்தது. வேட்பு மனுவை திரும்ப பெறும் கடைசி நாளி... மேலும் பார்க்க

`ராஜ் தாக்கரே வேண்டும்’ உத்தவ் உறுதி; காங்கிரஸ் முட்டுக்கட்டை - சரத் பவார் சமாதானம் கைகொடுக்குமா?

மகாராஷ்டிராவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் முடிந்த பிறகு அடுத்த கட்டமாக ஜனவரி மாதம் மும்பை உட்பட மாநிலம் முழுவத... மேலும் பார்க்க

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங். குழு; "அரசல் புரசல் செய்திகளுக்கு முடிவு" -ப.சிதம்பரம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் மெல்ல பரப்புரைகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் கிராமங்கள் தோறும் பரப்புரை நிகழ்த்தி வருகின... மேலும் பார்க்க