செய்திகள் :

சேலம் திமுக நிர்வாகி கொலை: ``ரூ. 5000-க்கு துப்பாக்கிகள் கிடைக்கின்றன" - அன்புமணி குற்றச்சாட்டு

post image

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளரும், விவசாயியுமான ராஜேந்திரன் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் இராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அன்புமணி
அன்புமணி

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இராஜேந்திரனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர்களான இராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர்கள் இராஜேந்திரனைச் சுட்டுக் கொலை செய்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

நிலத்தகராறுக்குக் கூட ஆளும்கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை மோசமடைந்திருப்பதைப் பார்க்கும் போது தமிழ்நாட்டு மக்களுக்கு என்னதான் பாதுகாப்பு? என்ற வினாதான் எழுகிறது.

திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கு மட்டும்தான் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி பா.ம.க. நிர்வாகிகளை ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் கைது செய்து பொய் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பழிவாங்கத் துடிப்பதில் காட்டும் அக்கறையையும், செலவிடும் நேரத்தையும் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறை செலவிட்டிருந்தால் இத்தகைய படுகொலைகளைத் தடுத்திருக்க முடியும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆனால், திமுக காவல்துறை அதற்குத் தயாராக இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கிக் கலாசாரம் தலைவிரித்தாடுகிறது என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன்.

அந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில்தான் சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். கடந்த சில வாரங்களுக்கு முன் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், வழக்கறிஞருமான சு.சக்கரவர்த்தியை அதே பகுதியைச் சேர்ந்த சமூகவிரோதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தடையின்றி கிடைப்பதுதான் அதற்கு காரணம் ஆகும்.

துப்பாக்கி
துப்பாக்கி

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைப்பதாகவும், ரூ.5000 விலைக்குக் கூட துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

ஆனாலும், துப்பாக்கிக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. மக்களைப் பாதுகாக்கத் தவறிய திமுக தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது. தங்களைக் காக்கத்தவறிய திமுகவுக்கு வரும் தேர்தலில் சரியான தண்டனையை தமிழ்நாட்டு மக்கள் அளிப்பார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`வேட்புமனு வாபஸ் அச்சம்’ - கூட்டணியில் இருந்தும் வேட்பாளர்களை ஹோட்டலில் தங்கவைத்த பாஜக, சிவசேனா

மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, மனுவை வாபஸ் பெறும் நாள் நேற்றோடு முடிந்தது. வேட்பு மனுவை திரும்ப பெறும் கடைசி நாளி... மேலும் பார்க்க

`ராஜ் தாக்கரே வேண்டும்’ உத்தவ் உறுதி; காங்கிரஸ் முட்டுக்கட்டை - சரத் பவார் சமாதானம் கைகொடுக்குமா?

மகாராஷ்டிராவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் முடிந்த பிறகு அடுத்த கட்டமாக ஜனவரி மாதம் மும்பை உட்பட மாநிலம் முழுவத... மேலும் பார்க்க

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங். குழு; "அரசல் புரசல் செய்திகளுக்கு முடிவு" -ப.சிதம்பரம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் மெல்ல பரப்புரைகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் கிராமங்கள் தோறும் பரப்புரை நிகழ்த்தி வருகின... மேலும் பார்க்க

`மேக்கேதாட்டு அணை - மெட்ரோ - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு’ - எடப்பாடி பழனிசாமி விரிவான பேட்டி

சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, ``கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் பேட்டியில், மேக்கேதாட்டு அணை ... மேலும் பார்க்க

`அதிமுக ஆட்சியில்தான் மதுரைக்கு மெட்ரோ ரயில் வர மீனாட்சி விரும்புகிறார்' - சொல்கிறார் செல்லூர் ராஜூ

"மெட்ரோ ரயிலை மத்திய அரசு தடுத்து விட்டது என்று பரப்புவது திமுகவின் நாடகம். மத்திய அரசு அனுப்பிய கடிதம் வழக்கமான நடைமுறைதான்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மெட்ரோமதுரைய... மேலும் பார்க்க

`நிதிஷின் 20 வருட முக்கிய இலாகாவும் போனது’ - அதிகாரத்தில் மேலோங்கும் பாஜக! | பீகார் அமைச்சரவை

பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.நவம்பர் 20-ல் நடைபெற்ற... மேலும் பார்க்க